மொத்த சம்பளத்தையும் வேலையாட்களுக்கு கொடுத்த ரஜினிகாந்த்!.. சம்பளமே வாங்காமல் நடித்த படம்!.. என்ன காரணம் தெரியுமா?

தமிழில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட பல வருடங்களாக மக்களுக்கு பிடித்த வகையில் மாஸ் படங்களாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். தற்சமயம் ஜெயிலர் என்கிற ஹிட் படத்தை கொடுத்தார் ரஜினிகாந்த்.

அதனை தொடர்ந்து வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கிற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இதன் டைட்டில் ப்ரோமோ கூட சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இப்போது பல கோடிகளில் சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த். ஒரு காலத்தில் அவர் வாங்கிய மொத்த சம்பளத்தையும் வேலையாட்களுக்கு கொடுத்த சம்பவமும் நடந்துள்ளது. உழைப்பாளி திரைப்படத்தில் இவர் நடித்து கொண்டிருந்தப்போது அந்த படத்தை தயாரிப்பாளர் நாகி ரெட்டி தயாரித்து வந்தார்.

rajinikanth
rajinikanth
Social Media Bar

அவர் அந்த திரைப்படத்தில் ரஜினிக்கு சம்பளமாக 108 தங்க காசுகளை கொடுத்தார். நாகி ரெட்டியின் கை ராசியான கை. அவர் கையால் தங்கம் கொடுத்தால் அது பெருகும் என அப்போது பேச்சு இருந்தது. இந்த நிலையில் அவர் கொடுத்த தங்க காசுகள் ராசியானவை என நினைத்தார் ரஜினி.

எனவே உழைப்பாளி படப்பிடிப்பு முடிந்ததும் அவற்றை அங்கு பணிப்புரிந்த ஊழியர்களுக்கு பிரித்துக்கொடுத்துள்ளார். அவர்களுக்கு பணம் பெருகட்டும் என்ற எண்ணத்தில் அதை கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.