என்ன சார் இவ்வளவு மொக்கையா இருக்கு பாட்டு… தேவா பாட்டால் அப்செட் ஆன சூப்பர் ஸ்டார்!..
கிராமிய கானா பாடல்களை பொறுத்தவரை அதை திரைக்கு கொண்டு வந்து அதற்கு தனி அங்கீகாரத்தை பெற்று தந்தவர் இசையமைப்பாளர் தேவா. இப்போதும் கூட கிராமத்தின் போகும் பேருந்துகளில் தேவாவின் பாடல்களை கேட்க முடியும்.
சினிமாவிற்கு வந்தது முதல் பல்வேறு நடிகர்களுக்கு சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் தேவா. கமல், ரஜினியில் துவங்கி விஜய் அஜித் வரை பலருக்கும் இவர் இசையமைத்துள்ளார். அப்படி தேவா இசையமைத்த படங்களிலேயே மாஸ்டர் பீஸ் என்றால் அது பாட்ஷா திரைப்படம்தான்.

அந்த படத்தின் வெற்றிக்கு தேவாவின் இசையும் முக்கிய காரணமாக இருந்தது. அதில் பிரபலமான பாடலான நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் பாடல் ஆட்டோ ஊழியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. முதலில் அந்த பாட்டை கொஞ்சம் ஆங்கில பாணியில் இசையமைத்திருந்தார் தேவா.
ஆனால் அந்த பாடல் ரஜினிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனையடுத்து சார் எனக்கு நம்ம ஊர் பாணியில் ஒரு கானா பாடலை போட்டு கொடுங்கள். என கேட்டப்பிறகு தேவா நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் என்கிற பாடலை இசையமைத்துள்ளார்.