சந்திரமுகி படத்தில் ட்ரைவருக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினிகாந்த்!.. இவ்வளவு நாள் தெரியாம போச்சே!..

Chandramukhi Rajinikanth: திரைத்துறையில் நடிகர்கள் பலர் என்னதான் பிரபலமாக இருந்தாலும் அவர்களை சுற்றி உள்ளவர்கள் மீது நட்பும் அன்பு கொண்டிருப்பார்கள். அப்படியான சில நடிகர்கள் அவர்களை சுற்றி இருக்கும் மக்களுக்கு நன்மைகள் செய்வதுண்டு.

அப்படியாக ரஜினியும் ஒரு விஷயத்தை செய்துள்ளார். ரஜினியிடம் பல வருடங்களாக ஓட்டுனராக இருந்து வருபவர் ராஜ் பகதூர் என்பவர். இவர் ரஜினியின் சிறந்த நண்பர் என்றும் கூறலாம். இவருக்கு பெரிதாக நடிப்பு வராது என்றாலும் சினிமாவில் ஏதேனும் திரைப்படங்களில் ஒன்று அல்லது இரண்டு காட்சிகளிலாவது வரவேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்தது.

இந்த விஷயம் ரஜினிக்கு ரொம்ப நாட்களாக தெரியாமலே இருந்தது. இந்த நிலையில் ஒருநாள் இந்த விஷயம் தெரிந்த ரஜினிகாந்த் அவரை அழைத்து என் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிக்கிறாயா என கேட்டுள்ளார். அவரும் அதற்கு ஒப்புக்கொள்ளவே சந்திரமுகி திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பை கொடுத்தார் ரஜினிகாந்த்.

Social Media Bar

அதில் வரும் தேவுடா தேவுடா பாடலில் ரிப்பீட்டு என்கிற ஒரு வார்த்தை வரும் அதை முதல் தடவை படத்தின் தயாரிப்பாளரும் இரண்டாவது தடவை படத்தின் இயக்குனர் பி வாசுவும் கூறுவார், மூன்றாவது தடவை ரஜினியின் ஓட்டுனரான ராஜ் பகதூர் கூறுவதாக அந்த பாடல் அமைந்திருக்கும்.