Tamil Cinema News
ரஜினிகாந்தையே காக்க வைத்த தமன்னா.. இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல..!
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகமான ஜெயிலர் 2 இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குவதற்கான வேலைகள் சென்று கொண்டிருக்கின்றன.
தற்சமயம் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். எனவே மார்ச் மாதம்தான் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.
அடுத்த வருடம் டிசம்பர் 12 அன்று ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு அந்த படத்தை வெளியிடலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்புக்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்பதால் 2025 இல் ஜெயிலர் 2வை எதிர்பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் போன பாகத்தில் நடிகை தமன்னாவின் பாடல் ஜெயலர் படத்திற்கு முக்கிய அம்சமாக இருந்தது. அதே மாதிரி இந்த படத்திலும் பாடல் இருக்குமா என்கிற கேள்வி இருந்து வந்தது.
ஆனால் போன படத்தில் நடித்த நடிகை தமன்னா பட குழுவை காக்க வைத்து விட்டார் என்று கூறப்படுகிறது. அவருடைய கால்ஷீட் கிடைப்பதில் சிரமம் இருந்தது. இதனால் ரஜினியே தமன்னாவின் வருகைக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே தமன்னாவிற்கு பதிலாக வேறு நடிகை இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. என்றும் கூறப்படுகிறது.