Tamil Cinema News
நீங்கதான் காப்பாத்தணும்..கமல் படத்தால் வந்த பிரச்சனை.. ஆக்ஷன் எடுத்த ரஜினி..!
தமிழ்நாட்டில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரிக்கும் ஒரு சில முக்கிய நிறுவனங்களில் லைக்கா நிறுவனமும் ஒன்றாகும். நடிகர் ரஜினி விஜய் மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிப்பதற்கு குறைந்த அளவிலான தயாரிப்பு நிறுவனங்கள் தான் தமிழ் சினிமாவில் இருக்கின்றன.
அப்படியான நிறுவனங்களில் லைக்காவும் ஒன்று. வெளிநாடுகளில் மொபைல் சிம் விற்று வரும் ஒரு நிறுவனமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறது.
சமீபத்தில் லைக்காவிற்கு நிறைய திரைப்படங்கள் தோல்வி படமாக அமைந்தது வரிசையாக லால் சலாம் விடாமுயற்சி இந்தியன் 2 மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே இவர்களுக்கு மிகுந்த தோல்வியை ஏற்படுத்தின. இந்த நிலையில் இந்தியன் 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று கொண்டு இருக்கிறது.
இதற்கு காரணம் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு நிறைய செலவு செய்து அந்த படம் ஓடவில்லை என்பதால் மூன்றாம் பாகத்திற்கான தயாரிப்பு செலவு குறைத்துள்ளது லைக்கா. இதனால் இயக்குனர் ஷங்கருக்கும் லைக்காவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே இந்த பாடப்பிடிப்பு நின்று விட்டது.
இந்த நிலையில் இது குறித்து ரஜினிகாந்திடம் உதவி கேட்டிருக்கிறது லைக்கா நிறுவனம். ஷங்கரிடம் பேசி மீதி படப்பிடிப்பையும் நடத்துமாறு ரஜினிகாந்திடம் கேட்டுள்ளது லைக்கா நிறுவனம். இதனை அடுத்து ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கரை நேரில் சந்தித்து இருக்கிறார்.
இருந்தாலும் கூட பட்ஜெட் விஷயங்களில் இன்னமுமே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.
