Connect with us

ரஜினி பலமுறை கூப்பிட்டும் ஐஸ்வர்யா ராய் நடிக்காத திரைப்படங்கள்!. என்னென்ன தெரியுமா? பெரிய லிஸ்டா இருக்கே!..

rajini aishwaryrai

Cinema History

ரஜினி பலமுறை கூப்பிட்டும் ஐஸ்வர்யா ராய் நடிக்காத திரைப்படங்கள்!. என்னென்ன தெரியுமா? பெரிய லிஸ்டா இருக்கே!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்படும் அளவிற்கு தொடர்ந்து வசூல் படங்களாக கொடுக்கக்கூடியவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிப்பதற்கு எந்த ஒரு நடிகையும் உடனே ஓ.கே சொல்லிவிடுவார்கள்.

ஆனால் ரஜினிகாந்த் பலமுறை முயற்சித்தும் கூட அவர் படத்தில் நடிக்காமல் இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். அனைவருக்கும் தெரிந்த வரையில் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஆனால் அதற்கு முன்பு பலமுறை ரஜினி தன்னுடைய திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்கான உள்காரணம் என்னவென்று தெரியவில்லை. இருந்தாலும் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக ஐஸ்வர்யா ராயோடு நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் ரஜினி.

இதுகுறித்து அவரே சந்திரமுகியின் வெற்றி விழாவில் பேசும்பொழுது கூறியுள்ளார். முதன்முதலாக படையப்பா படம் எடுக்கப்பட்டபோது ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் கேட்டார் ரஜினி.

ஆனால் அப்பொழுது ஐஸ்வர்யாராய் வரவில்லை. அதற்கு பிறகு பாபா திரைப்படத்திலும் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். அப்போதும் ஐஸ்வர்யா ராய் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு சந்திரமுகி திரைப்படத்தில் சந்திரமுகியாக நடிக்கும் ஜோதிகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யா ராயை கேட்டுள்ளனர்.

அப்போதும் மறுத்துவிட்டார் ஐஸ்வர்யா ராய். இறுதியாக சிவாஜி திரைப்படத்தை இயக்கும்போது அதிலும் ஐஸ்வர்யா ராய் தான் நடிக்க வேண்டும் என்று ரஜினி ஆசைப்பட்டு உள்ளார் ஆனால் இந்த முறையும் ஐஸ்வர்யா ராய் வரவில்லை கடைசியாக தான் எந்திரன் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார் ஐஸ்வர்யாராய்.

To Top