அந்த வண்டி வெளியே போனாதான் நான் உள்ள வருவேன்!.. ஏ.வி.எம் சரவணனால் கடுப்பான ரஜினிகாந்த்!..

கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் துவங்கி இப்போது வரை தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன்.

இதனை தொடர்ந்து அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு தளபதி என பெயர் வைக்க போவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதற்கு தகுந்தாற் போல இந்த படத்தில் தளபதி படத்தில் நடித்த நடிகை ஷோபனா இவருக்கு ஜோடியாக நடிக்க போவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

ஆரம்ப காலக்கட்டம் முதலே ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் எக்கச்சக்க திரைப்படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். இயக்குனர் ஷங்கரின் சிவாஜி திரைப்படத்தையும் ஏ.வி.எம் நிறுவனம்தான் தயாரித்தது. இந்த நிலையில் ரஜினிகாந்திற்கு நேரில் சென்று கதை சொல்ல முடியாது என அப்போது கூறியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.

rajinikanth
rajinikanth
Social Media Bar

இயக்குனர் ஷங்கரை பொறுத்தவரை யாருக்கும் அவர் நேரில் சென்று கதை சொல்லி பழக்கம் கிடையாதாம். இருந்தாலும் ஏ.வி.எம் நிறுவனத்திற்காக வந்து நடித்து கொடுத்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது ரஜினிகாந்த், இயக்குனர், நடிகை என முக்கியமானவர்களுக்கு மட்டும் கேரவன் வாகனம் வரவைக்கப்பட்டிருந்தது.

அதை பார்த்ததும் ரஜினிகாந்திற்கு கடுப்பாகிவிட்டது. எத்தனை வருடம் உங்களுடன் படம் பண்ணுகிறேன். கேரவன்லாம் எதுக்கு எனக்கு, என்னைக்கி நான் கேரவன் கேட்டுருக்கேன். அதுவும் வெளில சூட் போனாலும் பரவாயில்லை. ஸ்டுடியோக்குள்ள எதுக்கு கேரவன் இப்போ அதை வெளில கொண்டு போனாதான் படத்தில் நடிப்பேன் என கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்தே கேரவன் வேண்டாம் என்று கூறியதால் இயக்குனர் ஷங்கர், ஸ்ரேயா அனைவருமே கேரவன் என கூறிவிட்டனர். இந்த செய்தியை ஏ.வி.எம் சரவணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.