Tamil Cinema News
நான் ஜெயலலிதாவை எதிர்க்க காரணம்.. பல வருட உண்மையை கூறிய ரஜினிகாந்த்.!
1996 இல் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர போவதாக கூறி வந்தார் ஆனால் இறுதியாக அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்து விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் ஆர்.எம் வீரப்பன் குறித்த ஆவணப்படுத்தில் ரஜினிகாந்த் பேசியிருந்தது அதிக சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் கூட அவர் தொடர்ந்து அதிமுகவிற்கு எதிராக இருந்தார். முக்கியமாக ஒரு சமயம் அவர் திமுகவிற்கு ஆதரவளித்ததன் காரணமாக திமுக அந்த அப்போதைய சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை ஈட்டியது என பேச்சு உண்டு.
இதனாலேயே ஜெயலலிதாவிற்கும் ரஜினிகாந்திற்கும் இடையே பிரச்சனை இருந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் அந்த பிரச்சனைக்கு என்ன காரணம் என்பதை ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் கூறும்பொழுது பாட்ஷா திரைப்படத்தை தயாரித்தது ஆர்.எம் வீரப்பன் அவர்கள்தான் பாட்ஷா படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நடந்த பொழுது அதில் நான் வெடிகுண்டு கலாச்சாரம் குறித்து பேசி இருந்தேன்.
அந்த ஒரு நிகழ்ச்சியில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசியது தவறுதான் ஆனால் அப்பொழுது எனக்கு அதைப் பற்றி எல்லாம் தெரியாது அதனால் நான் பேசி விட்டேன் இதனால் கோபமடைந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆர்.எம் வீரப்பனை அதிமுக கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்.
இது எனக்கு ஒரு ஆறாத வடுவாக இருந்தது. என்னால் தானே அவருக்கு அந்த பதவி போனது என தோன்றியது என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் ரஜினிகாந்த்.
