ஒரு பெண் கேட்ட அந்த கேள்வி… ரஜினியின் வாழ்க்கையையே புரட்டி போட்டது!.. என்ன தெரியுமா?

Actor Rajinikanth: ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகராவார். தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் அவரது இளமைக்காலக்கட்டங்களில் அதிகமாக சர்ச்சைக்கு உள்ளானவர் நடிகர் ரஜினிகாந்த்.

இதற்கு நடுவே ஒருமுறை மனநல பிரச்சனையால் கூட அவர் பாதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பல விஷயங்களை செய்தார். இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவமும் பெற்று வந்தார்.

இந்த நிலையில் சில படங்கள் நடித்து முடித்தவுடனேயே ரஜினிகாந்த் குறித்த சர்ச்சைகள் கிளம்ப துவங்கின. முக்கியமாக ரஜினிகாந்த் ஒரு நடிகையை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் கூறப்பட்டது.

rajinikanth
rajinikanth
Social Media Bar

உடனே அதற்கு மறுப்பு தெரிவித்து பேட்டி கொடுத்தார் ரஜினிகாந்த். இந்த மாதிரி தவறாக எழுதாதீர்கள் இதனால் அந்த பெண்ணின் எதிர்கால வாழ்க்கையே பாதிக்கப்படும் என பத்திரிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில்தான் அவர் லதாவை சந்தித்தார். லதா ஒய்.ஜி மகேந்திரன் மூலமாக ரஜினிகாந்திடம் பழக்கமானார். ஒருமுறை இந்த சர்ச்சை குறித்து ரஜினிகாந்திடம் பேசிய லதா பேசும்போது எந்த மாதிரியான பெண்ணை நீங்கள் திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு ரஜினிகாந்த் மிகவும் லட்சணமான குடும்ப பாங்கான பெண்ணைதான் நான் திருமணம் செய்துக்கொள்வேன் என கூறியுள்ளார். அதை கேட்டதும் லதா புரியவில்லை என கூறவும் உங்களை மாதிரி ஒரு பெண் கிடைத்தால் திருமணம் செய்துக்கொள்வேன் என கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

உடனே லதாவிற்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. இதன் மூலம் அவருக்கும் ரஜினிகாந்தை திருமணம் செய்துக்கொள்ள விருப்பமிருப்பது தெரிந்துள்ளது. இந்த நிலையில் இருவருக்கு பிறகு திருமணமானது. ஒரு பேட்டியில் இந்த நிகழ்வை கூறிய ரஜினிகாந்த், அன்று மட்டும் லதா அந்த கேள்வியை கேட்கவில்லை என்றால் நான் இப்படி பதில் சொல்லியிருப்பேனா என தெரியாது என கூறியுள்ளார்.