எனக்கு பிடிக்கலை.. க்ளைமேக்ஸை மாத்துங்க.. ரஜினியின் முகத்துக்கு முன் சொன்ன ஏ.வி.எம்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கும் ஏ.வி.எம் நிறுவனத்திற்கும் இருக்கும் தொடர்பு என்பது பல வருட பந்தம் என்றே கூறலாம். பெரும்பாலும் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்கள் அனைத்தையும் ஏ.வி.எம் நிறுவனம்தான் தயாரித்து வந்தது.

அப்படியாக ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எஸ்.பி முத்துராம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் நல்லவனுக்கு நல்லவன். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியை மாற்ற வேண்டும் என்று ஏவிஎம் சரவணன் விடாப்படியாக இருந்துள்ளார்.

இது குறித்து அவரே தனது புத்தகத்தில் பதிவு செய்து இருக்கிறார். அதில் கூறும்பொழுது நல்லவனுக்கு நல்லவன் திரைப்படத்தில் ரஜினிக்கு பிறகு நடிகர் கார்த்திக் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இருந்தார். இந்த படம் முடியும்பொழுது ரஜினிக்கு என்று எந்த ஒரு சண்டைக்காட்சியும் இல்லாமல் படம் முடிவதாக இருந்தது.

Social Media Bar

அது ஏ.வி.எம் சரவணனுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. படத்தில் கிளைமாக்ஸின் பொழுது கண்டிப்பாக ரஜினிக்கு ஒரு சண்டை காட்சி இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால் படத்தின் கதைகளம் அந்த மாதிரியானது இல்லை என்பதால் எஸ்.பி. முத்துராமன் அதற்கு அனுமதிக்கவில்லை.

இருந்தாலும் வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் சொன்னதால் கிளைமாக்ஸில் சண்டை காட்சிகள் வைத்து படம் எடுக்கப்பட்டது. ஆனால் வெளியான பிறகு மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது நல்லவனுக்கு நல்லவன் திரைப்படம் அப்போதைய காலகட்டத்திலேயே 100 நாட்கள் வரை ஓடி ஹிட் கொடுத்தது.