ஒரு காலத்தில் பெரும் கதாநாயகர்களாக நடித்த நடிகர்களுக்கெல்லாம் தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போன சம்பவங்கள் நடந்துள்ளன. கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர்கள் பலரும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் வளர துவங்கிய பிறகு சினிமாவில் காணாமல் போயினர்.
அதன் பிறகு அவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்க துவங்கினர். உதாரணத்திற்கு ரஜினிகாந்த் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தப்போதே சிவக்குமார், ஜெய்சங்கர் இருவரும் சினிமாவில் பெரும் நடிகர்களாக இருந்து வந்தனர்.

ஆனால் ரஜினிகாந்த் வளர துவங்கிய காலக்கட்டத்தில் இவர்களுக்கு வரவேற்பு குறைய துவங்கியது. இந்த நிலையில் முரட்டு காளை திரைப்படத்தில் ஜெய்சங்கர் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். அதே போல அருணாச்சலம் திரைப்படத்தில் ரஜினிக்கு மாமனாராக நடித்திருப்பார்.
முத்துராமனுக்கு வந்த வாய்ப்பு:
அதே போல நடிகர் முத்துராமனும் ரஜினியுடன் வில்லனாக ஒரு படத்தில் நடித்தார். அந்த படம்தான் போக்கிரி ராஜா. போக்கிரி ராஜா திரைப்படத்தை இயக்க துவங்கும்போதே அதில் வில்லனாக முத்துராமன் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார் பஞ்சு அருணாச்சலம்.
எனவே அதுக்குறித்து முத்துராமனிடம் பேசினார். முதலில் வில்லனாக நடிக்க முத்துராமன் மறுத்தாலும் பிறகு பஞ்சு அருணாச்சலத்திற்காக அந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் துர்திருஷ்டவசமாக முத்துராமன் இறந்துவிட்டார்.

இருந்தாலும் இது அவருக்கு இறுதி படமாக இருக்குமே என நினைத்து முத்துராமனை வில்லனாக வைத்து படத்தின் ட்ரைலரை வெளியிட்டனர். அந்த ட்ரைலரை பார்த்து மக்கள் அனைவரும் முத்துராமன் மீது அனுதாபப்பட்டனர்.
இதனை கண்ட ஏ.வி.எம் நிறுவனம் ஒரு வில்லனை பார்த்து மக்கள் பரிதாபப்படுவது படத்திற்கு வெற்றியை தராது. எனவே வில்லனை மாற்றுங்கள் என கூறியுள்ளார். அதன் பிறகு மறுப்படப்பிடிப்பு நடத்தப்பட்டு அந்த படம் வெளியானது.






