Connect with us

இந்த இடத்துல பாட்டு இல்லைனா படம் நல்லா இருக்காது!.. ஒரே நாளில் எடுக்கப்பட்ட ரஜினி பட பாடல்!.

rajinikanth

Cinema History

இந்த இடத்துல பாட்டு இல்லைனா படம் நல்லா இருக்காது!.. ஒரே நாளில் எடுக்கப்பட்ட ரஜினி பட பாடல்!.

Social Media Bar

Rajinikanth : ரஜினி பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார். அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வெற்றியையும் கொடுத்துள்ளன. எனவே ரஜினிகாந்த் நடிப்பிற்கு இப்போது வரை வரவேற்பு இருந்து வருகிறது.

ரஜினிகாந்தும் சிவாஜியும் ஒன்றாக நடித்து தமிழில் பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் படிக்காதவன். படக்கதைப்படி ரஜினியின் அண்ணனாக சிவாஜி கணேசன். தாய் தந்தை இல்லாத தனது தம்பிகளை பாசமாக வளர்ப்பார் சிவாஜி. ஆனால் திருமணத்திற்கு பிறகு அண்ணி தொல்லை தாங்காமல் தம்பியை அழைத்து கொண்டு வெளியேறிவிடுவார் ரஜினி.

கூலி வேலை பார்த்து தம்பியை படிக்க வைப்பார். ஆனால் அவரது தம்பியின் தவறான நடவடிக்கையால் குற்றவாளி ஆவார் ரஜினி. இப்போது ரஜினிக்கு வழக்காடும் வக்கீலாக சிவாஜி கணேசன் வருவார். இந்த படத்தை இயக்குனர் ராஜ சேகர் இயக்கினார்.

இந்த படமும் கிட்டத்தட்ட 6 கோடி வரை வசூல் சாதனை செய்தது. ஆனால் அப்போது பொதுவாக ஒரு வழக்கம் இருந்தது. ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டால் அதை திரை வல்லுநர்களுக்கு போட்டு காட்டுவார்கள். அவர்கள் படம் குறித்து என்ன மாறுதல் செய்ய வேண்டும் என கூறுவார்கள்.

இந்த நிலையில் படிக்காதவன் திரைப்படத்தை பஞ்சு அருணாச்சலமும், ராஜசேகரும் சேர்ந்து பார்த்தனர். அப்போது படத்தில் இன்னும் ஒரு பாட்டு இருக்க வேண்டும் என பஞ்சு அருணாச்சலம் கூறிவிட்டார். ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு முடிந்து அனைத்து நடிகர்களும் அடுத்த படத்திற்கு போய்விட்டனர். இப்போது எப்படி பாட்டு எடுப்பது என யோசித்தார் தயாரிப்பாளர்.

பிறகு உடனே ரஜினிகாந்திற்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, அடுத்த நாளே பாடலுக்கான படப்பிடிப்பு. ஊர தெரிஞ்சிக்கிட்டேன். உலகம் புரிஞ்சிக்கிட்டேன் என்கிற பாடல்தான் அது.

To Top