News
நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம் – வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்
சினிமாவில் மிகப்பெரும் நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். தமிழில் பல காலங்களாக பெரும் நடிகராக இருந்து வரும் ரஜினிகாந்த் இடையில் அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார். ஒரு அரசியல் கட்சியை துவங்கி தேர்தலில் நிற்க வேண்டும் என ஆசைப்பட்டார். பிறகு சில காரணங்களால் அவர் அரசியலுக்கு வரவில்லை.

நாளை இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா நடக்க இருக்கிறது. நமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து தற்சமயம் 75 ஆண்டுகள் நிறைவடைவதால் ஒரு திருவிழா போல இந்த நிகழ்வை கொண்டாட உள்ளனர்.
இதற்காக இந்திய பிரத்மர் “இந்தியர் ஒவ்வொருவரும் தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்காக அரசாங்கம் இந்தியா முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை வழங்கி வருகிறது. இந்த நிகழ்விற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது “நமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 75 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்த தினத்தை கொண்டாடும் விதமாக நாளை அனைவரும் தங்கள் வீட்டில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும். மேலும் நமது அடுத்த தலைமுறைகளுக்கு நாம் எவ்வளவு இன்னல்களுக்கு நடுவே சுதந்திரம் பெற்றோம் என்பதை எடுத்துக்கூற வேண்டும். நாளை ஒரு நாள் மட்டுமாவது நாம் சாதி, மதம், கட்சி என்ற பேதங்களை விடுத்து இந்தியர்களாய் ஒன்றிணைவோம்” என கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்சமயம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்: https://twitter.com/rajinikanth/status/1558410017132331009
