தமிழ் திரையுலகில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் மிக முக்கியமானவராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ரஜினிகாந்த் ஒரு புகழ் பெற்ற நடிகராக இருந்தாலும் கூட உதவி செய்யும் விஷயத்தில் தொடர்ந்து ரஜினிகாந்த் குறித்து நிறைய மாறுபட்ட விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபத்தில் ரஜினி குறித்து சில விஷயங்களை கூறியிருந்தார்.
அதில் அவர் கூறும்பொழுது பத்ம ராஜன் என்கிற ஒரு பத்திரிகையாளர் ரஜினி இளமையாக இருந்த காலகட்டங்களில் பிரபலமாக இருந்தார். அந்த பத்திரிகையாளருக்கு இதயம் தொடர்பான நோய் ஒன்று இருந்தது. அதற்காக சிகிச்சை பெறுவதற்காக அவர் நிதி திரட்டி கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் ரஜினியின் உதவியாளர் அவரை சந்தித்தார் சந்தித்து ரஜினி கண்டிப்பாக இந்த மாதிரி விஷயங்களுக்கு உதவி செய்வாரே அவரை நேரில் சந்திக்கலாம் என்று கூறி ரஜினியிடம் அழைத்து சென்றார்.
ரஜினியும் விஷயங்களை எல்லாம் கேட்டுவிட்டு ஒரு கவரில் பணம் கொடுத்திருந்தார். ஆனால் அதில் அதிகமான தொகை இருந்தது போல தெரியவில்லை எனவே காசோலை மாதிரி ஏதாவது இருக்கலாம் என்று நினைத்தார் பத்திரிகையாளர் பத்மராஜன்.
பிறகு அவர் வெளியில் வந்து பார்த்த பொழுது அந்த கவரில் ஒரு 100 ரூபாய் நோட்டு மட்டும்தான் இருந்தது. அதனால் விரக்தி அடைந்தவர் அதற்குப் பிறகு நிதி திரட்டுவதையும் நிறுத்திவிட்டார். பிறகு சில மாதங்களிலேயே அவர் எந்த ஒரு சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமல் இறந்து விட்டார் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.