Connect with us

இந்த மதுரையில் பிறந்த மதுரை வீரன் அவர்!.. கேப்டனுக்கு கிடைத்த விருதால் மனம் உருகிய ரஜினிகாந்த்!..

rajinikanth vijayakanth

News

இந்த மதுரையில் பிறந்த மதுரை வீரன் அவர்!.. கேப்டனுக்கு கிடைத்த விருதால் மனம் உருகிய ரஜினிகாந்த்!..

Social Media Bar

தமிழ் திரையுலகில் மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு நடிகர்தான் விஜயகாந்த். ஆரம்பக்காலக்கட்டம் முதல் விஜயகாந்தின் இறுதி திரைப்படம் வரை அவருக்கென்று மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருந்துக்கொண்டுதான் இருந்தது.

அரசியலுக்கு வராமல் விஜயகாந்த் சினிமாவிலேயே இருந்திருக்கலாம் என பலரும் இப்போதும் கூறுவது உண்டு. அந்த அளவிற்கு விஜயகாந்தின் இழப்பை மக்கள் தாங்கி கொள்ள முடியாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு விஜயகாந்தை கௌரவிக்கும் வகையில் அவருக்கு பத்மபூசன் விருதை அறிவித்துள்ளது.

vijayakanth
vijayakanth

இதுக்குறித்து பேசிய ரஜினிகாந்த். என்னுடைய அருமை நண்பர் அமரர் விஜயகாந்திற்கு பத்மபூசன் விருது கொடுத்து கௌரவித்துள்ளனர். மிகவும் மகிழ்ச்சி. அதுமட்டுமின்றி இந்திய பத்மா அவார்ட் 24 புத்தகத்தில் அவரது வரலாற்றை பதிவிட்டுள்ளனர்.

அது அவரது பெயருக்கு இன்னமும் பெருமை சேர்க்கிறது. விஜயகாந்த் நம் கூட இல்லை என்பதையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. டக்குன்னு தோன்றி பல சாதனைகளை செய்து மறைந்துவிட்டார். இனி விஜயகாந்த் மாதிரி ஒருவரை பார்க்க முடியாது. மதுரையில் பிறந்த மதுரை வீரன் நம்ம கேப்டன் விஜயகாந்த் என கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

To Top