Tamil Cinema News
அந்த அமுல் பேபி பொண்ணா இது.. திரையரங்கில் நடிகையை பார்த்து ஆடிப்போன நடிகர் ரஜினி..!
சினிமாவில் அதிகமாக பேசப்படும் நடிகைகளில் எப்பொழுதுமே மிக முக்கியமானவராக நடிகை மீனா இருந்து வந்துள்ளார். ஏனெனில் மிக சிறு வயதிலேயே சினிமாவிற்கு வந்த நடிகைகளின் மீனாவும் ஒருவர்.
மீனா சினிமாவுக்கு வந்த காலகட்டங்களில் அதிகபட்சம் 15 வயதிலேயே நடிகைகள் நடிப்பதற்கு வந்து விடுவார்கள். மீனாவும் அப்படித்தான் சினிமாவிற்கு வந்தார். அதற்கு முன்பே அவர் சிறு வயதில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தார்.
அதேபோல நடிகர் மோகன்லால் பிரபு என்று பலருடனும் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்திருக்கிறார். ஆனால் அன்புள்ள ரஜினிகாந்த் படம் பிரபலம் என்பதால் பலரும் ரஜினிகாந்துடன் மட்டும்தான் சிறுவயதில் நடித்தார் என சிலர் நினைத்து கொண்டிருக்கின்றனர்.
ரஜினிகாந்த் கூறிய விஷயம்:
இந்த நிலையில் ரஜினிகாந்த் ஒரு விழாவில் பேசும்போது அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது அமுல் பேபி மாதிரி ஜப்பியாக குட்டியாக மீனா இருந்தார். பிறகு சில வருடங்களாக நாங்கள் தொடர்பில் இல்லை அவரிடம் நான் பேசவும் இல்லை.
பிறகு எஜமான் திரைப்படத்திற்கான வேலை சென்ற பொழுது மீனா அதில் கதாநாயகியாக நடிப்பதாக என்னிடம் கூறினார்கள். அந்த சின்ன பொண்ணு எப்படி கதாநாயகியாக நடிக்கும் என்று நான் கேட்டேன். அப்பொழுது மீனா நடித்த இரண்டு தெலுங்கு திரைப்படங்களை எனக்கு போட்டு காட்டினார்கள்.
அதை பார்த்ததும் எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது. நாம் பார்த்த அந்த அமுல் பேபி மொத்தமாக மாறி இருக்கிறாரே என்று தோன்றியது என அந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார் ரஜினிகாந்த்.