ஓரவஞ்சனை பிடிச்சவர் இளையராஜா!.. தொடர்ந்து வச்சி செய்யும் ரஜினிகாந்த்!.. அதிரடி பதில் தந்த இசைஞானி…!
ரஜினிகாந்த் திரைத்துறையில் வளர்ச்சி பெற்று வந்த அதே காலக்கட்டங்களில்தான் இளையராஜாவும் வளர்ச்சி பெற்று வந்து கொண்டிருந்தார். ஆனால் இளையராஜா தனது திரைப்படங்களுக்கு அவ்வளவு சிறப்பாக இசையமைக்கவில்லை என்பது ரஜினிகாந்தின் நெடு நாளைய குற்றச்சாட்டலாக இருந்து வருகிறது.
உண்மையில் ரஜினிகாந்துக்கும் ஏகப்பட்ட திரைப்படங்களில் ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளார் இளையராஜா. அதிசய பிறவி, முரட்டுக்காளை, ப்ரியா மாதிரியான ஏகப்பட்ட படங்களில் இளையராஜாவின் பாடல்கள் பெரும் வெற்றியை கொடுத்துள்ளன.

இந்த நிலையில் அமெரிக்கா வாழ் தமிழர்களிடம் நிகழ்ச்சி ஒன்றில் காணொளி வாயிலாக பேசிய ரஜினிகாந்த் இளையராஜா குறித்து பேசியிருந்தார், அதில் பேசும்போது இளையராஜா எனக்கும் கமல்ஹாசனுக்கும் நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளார்.
கமலுக்கு மட்டும் சலுகை:
ஆனால் ஒரு லெவலுக்கு பிறகு எனக்கு ஹிட் பாடல்கள் கொடுப்பது குறைந்துவிட்டது, ஆனால் கமல்ஹாசனுக்கு மட்டும் தொடர்ந்து ஹிட் பாடல்கள் கொடுத்து வந்தார். அதற்கு கமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்தது காரணமா? என தெரியவில்லை.
ஆனால் தேவர் மகன் படத்திற்கு போட்ட இசை எல்லாம் பிரமாதமாக இருக்கும். என கூறியுள்ளார். இதே போல மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போதும் கூட கமல்ஹாசனுக்கு போட்ட மாதிரி எனக்கு நீங்கள் இசையமைக்கவில்லை என இளையராஜாவிடமே குற்றம் கூறியிருந்தார் ரஜினி.

அப்போதே இதற்கு பதிலளித்த இளையராஜா நான் ஹீரோவை பார்த்து எல்லாம் மியுசிக் போடுறது கிடையாது. அப்படி பார்த்தால் ராமராஜனுக்கு கூடதான் நான் நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளேன் என அப்போதே இளையராஜா பதிலடி கொடுத்திருந்தார்.
ஆனால் ரஜினிகாந்த் அந்த பதிலுக்கு சமரசம் ஆகவில்லை என்பது இப்போது அவர் பேசியிருப்பதில் இருந்து தெரிகிறது.