Cinema History
அந்த படத்துல சூர்யாவுக்கு நடிக்கவும் வரல.. ஒண்ணும் வரல… ஓப்பனாக கூறிய ரஜினிகாந்த்!.
தமிழில் ஒரு காலத்தில் விஜய், அஜித்திற்கு இணையாக ஒரு காலத்தில் போட்டி நடிகராக இருந்தவர் நடிகர் சூர்யா. விஜய், அஜித் இருவரும் காதல் படங்களாக நடித்து வந்த அதே காலக்கட்டத்தில் சூர்யாவும் உன்னை நினைத்து, பூவெல்லாம் கேட்டுப்பார் மாதிரியான படங்களில் நடித்து வந்தார்.
அந்த சமயத்தில் விஜய் அஜித்திற்கு இருந்த அதே அளவு ரசிக கூட்டம் சூர்யாவிற்கும் இருந்தது. அதை தாண்டி சூர்யா நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல கதாபாத்திரங்களை நடித்துள்ளார். பிதாமகன், மாயாவி போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
இந்த நிலையில் ஒருமுறை பேட்டியில் சூர்யா குறித்து பேசிய ரஜினி, சூர்யாவிற்கு ஆரம்பத்தில் நடிக்கவே வரவில்லை. அவர் நடித்த நேருக்கு நேர் திரைப்படத்தை நான் பார்த்தப்போது என்ன இவனுக்கு நடிக்கவும் தெரியலை, டான்ஸ் ஆடவும் தெரியலை என நினைத்தேன்.
ஆனால் அதே சூர்யா தன்னை தானே செதுக்கி கொண்டு பிறகு அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார். அதன் பிறகு வந்த பிதாமகன், காக்க காக்க, சிங்கம் போன்ற படங்கள் எல்லாம் சூர்யாவின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் திரைப்படங்களாக இருந்தன என ஓப்பனாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ரஜினிகாந்த்.
