Connect with us

நான் கோமாவில் இருந்தப்ப என் குடும்பத்துக்கு பாதுகாப்பு கொடுத்தவர் கேப்டன்!.. விஜயகாந்த் இறப்பிற்கு வந்த ரஜினிகாந்த்…

rajinikanth vijaykanth

News

நான் கோமாவில் இருந்தப்ப என் குடும்பத்துக்கு பாதுகாப்பு கொடுத்தவர் கேப்டன்!.. விஜயகாந்த் இறப்பிற்கு வந்த ரஜினிகாந்த்…

Social Media Bar

தமிழ் சினிமா நடிகர்களிலேயே முக்கியப் புள்ளியான நடிகர் விஜயகாந்தின் மரணம் தமிழகத்திற்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. நேற்று முதல் விஜயகாந்தின் மரணம் குறித்த செய்திகள்தான் வெளியாகி வருகின்றன. திரை துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவரது இரங்கலில் கலந்து கொண்டு வருகின்றனர்.

நேற்று படப்பிடிப்பிற்காக கன்னியாகுமரி சென்று இருந்தார் ரஜினிகாந்த். படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு விஜயகாந்த்தை பார்க்க வந்திருந்தார் அப்போது அவர் சில முக்கியமான விஷயங்களை பத்திரிகை முன்னிலையில் பகிர்ந்து கொண்டார்.

நான் நேற்றே விஜயகாந்தின் இரங்கலுக்கு வர வேண்டுமென்று நினைத்தேன் ஆனால் படப்பிடிப்பு இருந்ததால் என்னால் நேற்று வர முடியவில்லை விஜயகாந்தை பொறுத்தவரை அவர் அனைவரிடமும் நட்பாக பழகக் கூடியவர்.

rajinikanth
rajinikanth

நட்பிற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர். ஆனால் எளிதில் கோபப்பட்டு விடுவார் அவரது நண்பர்கள் ரசிகர்கள் அரசியல்வாதிகள் ஏன் பத்திரிகையாளர்களிடம் கூட அவர் கோபப்பட்டு இருக்கிறார். ஆனால் அவரது கோபத்தில் நியாயம் இருக்கும். அதனால் திரும்ப யாருமே விஜயகாந்தின் மீது கோபப்படவே முடியாது.

எவ்வளவு கோபப்படுகிறாரோ அவ்வளவுக்கு அன்பு மிகுந்தவர் விஜயகாந்த் வீரத்திற்கும் தைரியத்திற்கும் பெயர் போனவர் என்று அவரை கூறலாம். எனது வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத இரண்டு நிகழ்வுகள் விஜயகாந்தால் நிகழ்ந்துள்ளன.

நான் ஒருமுறை மிகுந்த உடல் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தேன். எனக்கு சுய நினைவே இல்லை. எனது குடும்பத்தாரும் மருத்துவமனையில் தான் இருந்தனர் அப்பொழுது பெரும் கூட்டம் மருத்துவமனையை சுற்றிக்கொண்டு கத்திக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் அங்கு வந்த விஜயகாந்த் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்தக் கூட்டமே மொத்தமாக கலைந்து சென்றது.

vijayakanth
vijayakanth

மேலும் அன்று இரவு அந்த மருத்துவமனையில் எனக்கு பக்கத்து அறையை அவர் எடுத்துக்கொண்டு எனக்கும் என் குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளித்தார். அதே போல சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்த பொழுது அனைத்து நடிகர்களும் வண்டியில் ஏறி விட்டனர்.

ஆனால் நான் ஏற சிறிது தாமதமானது அந்த நேரத்தில் என்னை ரசிகர்கள் கூட்டம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து என்னால் வெளிவரவே முடியவில்லை அப்போது உள்ளே புகுந்த விஜயகாந்த் இரண்டு நொடிகளில் அனைவரையும் விரட்டி விட்டு என்னை அழைத்து வந்து உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே என்று கேட்டார்.

அப்படி ஒரு வீரம் மிகுந்த மனிதர் இப்படி ஒரு நிலையில் சமீபகாலமாக இருப்பதை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது 71 பாலில் பல சிக்ஸர்கள் பல பவுண்டரிகள் கொடுத்து தற்சமயம் அனைவரையும் துயரில் ஆழ்த்திவிட்டு சென்று இருக்கிறார் விஜயகாந்த். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார் அது விஜயகாந்த் தான் என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

To Top