Cinema History
ரஜினியை பார்த்துதான் எல்லோருக்கும் நல்லது செய்ய கத்துக்கிட்டேன்!.. ஓப்பனாக கூறிய அஜித்!..
தமிழ் நடிகர்களில் நடிகர் விஜய்க்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பத்தில் சினிமாவில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்தவர்தான் அஜித் குமார். பத்தாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு பிறகு கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற அஜித்தின் பெரிய ஆசையே எதிர்காலத்தில் சொந்தமாக ஒரு கார்மெண்ட்ஸ் வைக்க வேண்டும் என்பதுதான்.
சொந்தமாக அவர் கார்மெண்ட்ஸ் துவங்கிய பொழுது அதில் ஏகப்பட்ட நஷ்டத்தை கண்டார். அப்பொழுது சினிமாவில் நடிப்பதற்கு தொடர்ச்சியாக ஒரு வாய்ப்பு வரவே அவர் அமராவதி திரைப்படத்தில் நடிப்பதற்கு சென்றார்.
ஆனால் பிறகு அந்த ஒரு படமே அவரது மொத்த வாழ்க்கையும் மாற்றி போட்டு விட்டது. இப்பொழுது தமிழில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக அஜித் இருக்கிறார். அஜித் ஆரம்ப கட்டங்களில் நிறைய பேட்டிகளில் பேசியிருக்கிறார்.
அப்பொழுது ஒரு பேட்டியில் பேசும் பொழுது நீங்கள் பெரிய நடிகராக வந்த பிறகு மக்களுக்கு என்ன செய்வீர்கள் என்று பேட்டியில் கேட்டபோது ரஜினிகாந்த் முதன்முதலாக சினிமாவிற்கு வந்த போது மிகவும் கஷ்டத்தில்தான் வந்தார் ஆனால் இப்பொழுது அவர் வளர்ந்து பெரிய நடிகராக ஆன பிறகு அனைவருக்கும் நன்மைகள் செய்கிறார்.
ஆனால் அவர் சினிமாவிற்கு வரும்பொழுது அப்படி செய்வோம் என்று எதிர்பார்த்து இருக்க மாட்டார். அப்படித்தான் நானும் நான் இப்பொழுது ஆரம்ப நிலையில் இருக்கிறேன் ஆனால் நான் நன்றாக சம்பாதிக்க துவங்கியவுடன் பலருக்கும் நன்மைகள் செய்வேன். என்று அஜித் கூறி இருந்தார். அதேபோலவே அஜித் எதிர்காலத்தில் பலருக்கும் பல நன்மைகளை செய்துள்ளார். இதற்கெல்லாம் ரோல் மாடலாக ரஜினிகாந்த் இருந்திருக்கிறார் என்பதுதான் இதில் புதிய தகவல்.
