Connect with us

அந்த நடிகையையே நடிக்க வச்சிட்டீங்க.. மணிரத்தினத்தை பார்த்து வியந்த ரஜினி!.. தளபதி படம் உருவாக காரணமாக இருந்த சம்பவம்..!

maniratnam rajinikanth

Cinema History

அந்த நடிகையையே நடிக்க வச்சிட்டீங்க.. மணிரத்தினத்தை பார்த்து வியந்த ரஜினி!.. தளபதி படம் உருவாக காரணமாக இருந்த சம்பவம்..!

Social Media Bar

தமிழில் அதிகமான ரசிகர்களை கொண்டு தனக்கென தனி இடத்தை தக்க வைத்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவிற்கு இவர் அறிமுகமான சமயத்தில் மற்ற நடிகர்களை போலவே இவரையும் பலரும் கேலி செய்து வந்தனர்.

இந்த நிலையில் ரஜினி தன்னுடைய தனிப்பட்ட நடிப்பின் காரணமாக அந்த அவமானங்களை தாண்டி வந்தார். போன வருடம் ஜெயிலர் திரைப்படத்தின் மூலமாக பெரும் வெற்றியை கொடுத்த ரஜினிகாந்த் தற்சமயம் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வேட்டையன் திரைப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. அதனை தொடர்ந்து அடுத்து லோகேஷ் கனகராஜ் நடிப்பில் கூலி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் சிறப்பாக பேசப்படும் படங்களில் தளபதி திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும்.

rajinikanth
rajinikanth

அஞ்சலி திரைப்படத்தை பார்த்தப்பிறகு ரஜினியே ஆசைப்பட்டுதான் தளபதி திரைப்படத்தில் நடித்து கொடுத்தாராம். அஞ்சலி திரைப்படத்தில் ரகுவரன், ரேவதி, பிரபு, பேபி ஷாமிலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

அதில் பேபி ஷாமிலியின் நடிப்பை பார்த்து அசந்துப்போன ரஜினிகாந்த், “ஒரு 2 வயது பெண்ணையே இவ்வளவு நடிக்க வைக்கிறார் என்றால் இவர் சாதாரண இயக்குனர் அல்ல, இவரது திரைப்படத்தில் நடிப்பதற்கு நான் ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்துக்கொடுத்த திரைப்படம்தான் தளபதி. ஆனால் தளபதி திரைப்படத்தில் நடிக்க சென்றப்பிறகு ரஜினிகாந்த் பட்ட பாடு மிக அதிகம். அதனை அவர் இன்னொரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

To Top