Tamil Cinema News
என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு.. விஜயகாந்த் குறித்து சர்ச்சை பதில் அளித்து சிக்கிய ரஜினி..!
சமீப காலமாகவே ரஜினிகாந்த் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகும் ஒரு நடிகராக மாறி வருகிறார். படப்பிடிப்பு காரணமாக அதிக பிசியாக இருக்கும் ரஜினிகாந்த் மற்ற செய்திகளை அதிகமாக தெரிந்து வைத்து கொள்ளாமல் இருக்கிறார்.
அவர் பிஸியாக இருப்பதுதான் அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து கூலி திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அதை முடித்துவிட்டு ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
கூலி திரைப்படத்தை பொருத்தவரை இந்த படத்திற்கான கால்ஷீட் அளவு மிகக் குறைவாக இருப்பதால் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதனால் ரஜினிகாந்தும் நிற்பதற்கு நேரமில்லாமல் படபிடிப்புகளுக்கு சென்று கொண்டு இருக்கிறார்.
சமீபத்தில் கூட திருவண்ணாமலையில் நடந்த நிலச்சரிவு குறித்து ரஜினிகாந்திடம் கேட்ட பொழுது அவருக்கு அது குறித்து எதுவுமே தெரியவில்லை. பத்திரிகையாளர்கள் கூறியபொழுதுதான் அப்படி ஒரு விஷயம் நடந்தது அவருக்கு தெரிந்தது.
இந்த நிலையில் நேற்று விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி பல நிகழ்வுகள் அனுசரிக்கப்பட்டன. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்திடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் உடனே வாழ்த்துக்கள் என கூறினார்.
இதனால் குழப்பம் அடைந்த பத்திரிகையாளர்கள் பிறகு இந்த விஷயத்தை விளக்கி கூறவும் ஓஹோ என்று கூறிவிட்டு சென்று இருக்கிறார். ஏன் ரஜினிகாந்த் சமீப காலங்களாக இப்படி கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பது கிடையாது என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.
