Connect with us

தொடர்ந்து சின்ன இயக்குனர்களுக்கு துரோகம் செய்யும் ரஜினி, கமல்… இதெல்லாம் நியாயமா!..

rajini kamal

News

தொடர்ந்து சின்ன இயக்குனர்களுக்கு துரோகம் செய்யும் ரஜினி, கமல்… இதெல்லாம் நியாயமா!..

Social Media Bar

Rajinikanth and Kamalhaasan : அஜித் விஜய் மாதிரியான இளம் நடிகர்கள் சினிமாவிற்கு வந்தே 20 வருடத்தை தாண்டி விட்டன. ஆனாலும் கூட் தங்களுடைய மாஸ் குறையாமல் தமிழ் சினிமாவில் இன்றும் கதாநாயகர்களாக கோடிகளில் ஹிட் கொடுத்து கொண்டிருப்பவர்கள்தான் நடிகர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்.

இவர்கள் இருவருமே கடந்த சில வருடங்களாக புது முக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். முக்கியமாக ரஜினிகாந்த் அதிகமாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அந்த வகையில் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சிறுத்தை சிவா, நெல்சன், த.செ ஞானவேல்ராஜா மாதிரியான இயக்குனர்களுக்கு வரிசையாக வாய்ப்புகளை வழங்கி வருகிறார் ரஜினிகாந்த்.

அதே போல கமல்ஹாசனும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்தார். என்னதான் இந்த நடிகர்கள் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தாலும் சில நேரங்களில் அவர்களது சினிமா வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடுகின்றனர் என்பது அவர்கள் மீது எழும் குற்றச்சாட்டாக இருக்கிறது.

உதாரணமாக டான் திரைப்படத்தை முடித்த உடனேயே அந்த படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்திக்கு ரஜினிகாந்த் வாய்ப்பு கொடுத்தார். சிபி சக்ரவர்த்தி கூறிய கதை ரஜினிக்கு பிடித்திருந்ததால் அவர் திரைக்கதை எழுதும் வேலையில் இறங்கினார். அதன் பிறகு ரஜினி திடீரென அவரை நீக்கிவிட்டு இயக்குனர் தா.செ ஞானவேல் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

இதனால் வெற்றி படம் கொடுத்தும் இன்னமும் அடுத்தப்படம் எடுக்க முடியாமல் இருக்கிறார் சிபி சக்ரவர்த்தி. அதே போல கமல்ஹாசனும் துணிவு படத்திற்கு பிறகு ஹெச். வினோத்தை வெகு காலம் காக்க வைத்து பிறகு அவருக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை.

இப்படி இவர்கள் செய்வதால் வெற்றி படங்கள் கொடுத்தும் கூட அடுத்த படத்தை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் இயக்குனர்கள் என்பது பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top