Connect with us

அப்போ ரஜினிகாந்த் கொஞ்சம் சரியில்லாம இருந்தாரு!.. சூப்பர் ஸ்டார் செயலால் அவதிக்குள்ளான தயாரிப்பு நிறுவனம்..!

Cinema History

அப்போ ரஜினிகாந்த் கொஞ்சம் சரியில்லாம இருந்தாரு!.. சூப்பர் ஸ்டார் செயலால் அவதிக்குள்ளான தயாரிப்பு நிறுவனம்..!

Social Media Bar

Rajini and Muktha Srinivasan : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தற்போது அவரது 170 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அவரது ஆரம்ப கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் ஓரிரு வெற்றிகளை பெற்ற பிறகு தான் இவர் நடிகருக்கான ஒரு அந்தஸ்தைப் பெற்றார்.

ஸ்டைலில் இவரை மிஞ்ச ஆளே கிடையாது. நடை, உடை, பாவனைகள், பேச்சு என்று எது எடுத்தாலும் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கிக்கொண்டு அதற்கான ரசிகர் பட்டாளங்களை வளைத்துப்போட்டுக்கொண்டார்.

அன்றைய காலத்தில் அவருக்கு இணையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன் தான். ரஜினிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி மற்றும் ஸ்டார் அந்தஸ்து கொடுத்த படங்களில் மிக முக்கியமான படம் “பொல்லாதவன்”.முக்தா பிலிம்ஸின் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் இந்த படம் 1980ல் வெளியானது.

இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து லட்சுமி, ஸ்ரீபிரியா போன்றவர்கள் நடித்திருந்தார்கள். அந்த படம் பேச்சுவார்த்தைக்கு முக்தா பிலிம்ஸ் அலுவலகத்திலிருந்து  ரஜினியை பார்க்க ராயப்பேட்டையில் உள்ள ரஜினியின் நண்பர் வீட்டிற்கு தினமும் வருவார்கள்.

அந்த சமயத்தில் முக்தா பிலிம்ஸ் பற்றி தெரியாததால் ஓரிடண்டு மாதங்கள் ரஜினியிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை.

அதனால் கடுப்பான முக்தா பிலிம்ஸ் பெரிய தலைகள் இப்போதே இவர் இப்படி செய்கிறார் இன்னும் நடிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை என பயந்து அந்த முயற்சியை கைவிட்டுவிடலாம் என்று எண்ணினார்கள்  இறுதியில் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ரஜினி. பொல்லாதவன் படம் ரஜினியின் வாழ்க்கையில் அவரது வளர்ச்சிக்கு ஒரு படிக்கல்லாகவும் இருந்தது.

To Top