Cinema History
இளையராஜா மறுத்தும் வேறு இசையமைப்பாளர் வைத்து ஹிட் கொடுத்த ரஜினி பாடல்!.. இசைஞானிக்கே அடியா!.
Ilayaraja : தமிழில் ஒரு மதிப்பு வாய்ந்த இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவர் இசையமைக்கிறார் என்றாலே அதற்கு ஒரு தனி வரவேற்பு இருந்தது. நடிகர் ராஜ்கிரண் கூட அவர் தயாரிக்கும் திரைப்படங்களில் எல்லாம் இளையராஜாவிடமே இசையை பெற்றார்.
மேலும் அவரது திரைப்பட போஸ்டர்களில் கூட இளையராஜாவின் போட்டோவை தான் பெரிதாக போடுவார். அந்த அளவிற்கு இளையராஜாவிற்கு அப்பொழுது வரவேற்பு இருந்தது. இளையராஜா தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில்தான் ரஜினிகாந்த்தும் தமிழ் சினிமாவில் வளர துவங்கி இருந்தார்.
இதனால் ரஜினிகாந்த் நடித்த 16 வயதினிலே திரைப்படத்தில் துவங்கி நிறைய திரைப்படங்களுக்கு இளையராஜாதான் இசை அமைத்து கொடுத்தார். ஆனால் பிரபலங்களாக இருப்பவர்களுக்கு மத்தியில் பிரச்சனை என்பது மிக எளிதாகவே வந்துவிடும்.

அந்த வகையில் இளையராஜாவிற்கும் ரஜினிக்கும் கூட பிரச்சினை ஏற்பட்டது உழைப்பாளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த பொழுது இந்த பிரச்சனை உருவானது. ஏனைய அந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவில்லை. அவர் வேலையாக இருந்ததால் அவரது மகன் கார்த்திக் ராஜாவை இசையமைக்க வைத்தார்.
இதில் ரஜினிக்கும் இயக்குனருக்கும் இளையராஜா மீது அதிருப்தி ஏற்பட்டது. இருந்தாலும் கூட ரஜினி அடுத்து பாட்ஷா திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த திரைப்படத்திற்கு இளையராஜாவே இசையமைக்கட்டும் என்று அவரிடம் கேட்டிருக்கிறார். ஆனால் இளையராஜா இனிமேல் ரஜினிக்கு இசையமைக்க மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டார்.
இதனை அடுத்து அப்போது அண்ணாமலை படத்திற்கும் தேவாதான் இசையமைத்தார் என்பதால் பாட்ஷா திரைப்படத்திற்கும் அவரிடமே சென்று கேட்டனர் ஆனால் இளையராஜா போட்டிருந்தாலும் கூட அப்படி ஒரு சிறப்பான இசை வந்திருக்குமா என்று தெரியவில்லை அப்படி ஒரு சிறப்பான இசையை பாட்ஷாவிற்கு வழங்கினார் தேவா.
