Actress
தங்க தாமரை மகளே – ரகுல் ப்ரீத்தி சிங்கின் கோல்டன் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் குறைவான அளவில் படங்கள் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமாக இருப்பவர் ரகுல் ப்ரீத்தி சிங்.

தமிழில் தடையர தாக்க, ஸ்பைடர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படமே இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது.

அந்த படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் ரகுல் ப்ரீத் சிங்கை மிகவும் அழகாக காட்டி இருப்பார். அந்த படத்திற்கு பிறகு பல இளைஞர்கள் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ரசிகர்களானார்கள்.

ஆனால் அதற்கு பிறகு வந்த திரைப்படங்களில் ரகுல் ப்ரீத் சிங்கிடம் எதிர்பார்த்த க்யூட்னஸ்க்கு பதிலாக விறைப்பான ஒரு கதாபாத்திரமாக தோன்ற துவங்கினார். தேவ், என்.ஜி.கே போன்ற திரைப்படங்களில் இவர் இப்படியாக தோன்ற இவருக்கு இருந்த ரசிகர்கள் தமிழ் வட்டாரத்தில் குறைந்தனர்.

ஆனால் தெலுங்கு சினிமாவில் தனது மார்க்கெட்டை தக்க வைத்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். தீபாவளியை முன்னிட்டு பல நட்சத்திரங்கள் அழகிய புகைப்படங்களை வெளியிட்டது போலவே இவரும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
