News
மீண்டும் எகிறிய மவுசு..! த்ரிஷாவுக்காக அஜித், விஜய் போட்டி?
நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் விஜய், அஜித்துடன் ஜோடி சேர த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

தமிழில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடித்து வருபவர் த்ரிஷா. தமிழ் தவிர மேலும் பல மொழி படங்களில் நடித்து வந்த த்ரிஷாவுக்கு கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் குறைந்திருந்தது.
தற்போது பொன்னியின் செல்வன் – 1 வெளியானது முதலாக த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
ஒரு காலத்தில் விஜய்யுடன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி.. அஜித்துடன் ஜீ, க்ரீடம், மங்காத்தா என ஜோடியாக நடித்து வந்தவர் த்ரிஷா. தற்போது மீண்டும் விஜய், அஜித் படங்களில் நடிக்க த்ரிஷாவுக்கு வாய்ப்பு வந்துள்ளதாம்.
முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்திலேயே த்ரிஷாவை நடிக்க வைத்திருக்கலாம் என ரசிகர்களிடையே பேச்சு இருந்து வந்தது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் ’தளபதி 67’ படத்தில் நாயகியாக நடிக்க த்ரிஷாவின் பெயரும் பேசப்படுகிறதாம். அதுபோல விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படத்திலும் த்ரிஷாவை நடிக்க வைப்பது குறித்து பேச்சுவார்த்தை உள்ளதாக கூறப்படுகிறது.
அப்படியாக மீண்டும் விஜய், அஜித் படங்களில் த்ரிஷா நடித்தால் பழைய ஃபார்முக்கு த்ரிஷா வந்துவிடுவார் என ரசிகர்களும் குஷி ஆகியுள்ளார்களாம்.
