நடிப்புக்கு ரெஸ்ட்.. இசைதான் பெஸ்ட்! – இசையமைப்பாளராகும் விஜய் சேதுபதி!?

பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி இசையமைப்பாளராக பயிற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலமாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து சூது கவ்வும், சேதுபதி, கடைசி விவசாயி என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் பாரபட்சமின்றி பெரிய ஹீரோக்களின் படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இவர் வில்லனாக நடித்த பேட்ட, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களும் ஹிட் அடித்தன. இதுதவிர சின்ன பட்ஜெட்டில் கலையம்சம் பொருந்திய படங்களையும் தயாரிக்கிறார். ஹீரோ, வில்லன், தயாரிப்பாளர் என பல முகம் கொண்ட விஜய் சேதுபதி தற்போது இசை பக்கம் தனது ஆர்வத்தை திருப்பியுள்ளாராம்.

இசை மீது முன்பிருந்தே அவருக்கு ஆர்வம் இருந்தாலும் சமீப காலமாக அதை முறையாக கற்க தொடங்கியிருக்கிறாராம். சேதுபதி படத்திற்கு இசையமைத்த நிவாஸ் கே.பிரசன்னாவிடம் ஓய்வு நேரங்களில் இசை கற்று வருகிறாராம் விஜய் சேதுபதி. எதிர்காலத்தில் ஒரு இசையமைப்பாளராகவும் தனது தனித்துவத்தை அவர் வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Refresh