Connect with us

என் மகளை நினைச்சாதான் கஷ்டமா இருக்கு.. கண் கலங்கிய ராமராஜன்.!

Tamil Cinema News

என் மகளை நினைச்சாதான் கஷ்டமா இருக்கு.. கண் கலங்கிய ராமராஜன்.!

Social Media Bar

கரகாட்டகாரன், பாட்டுக்கு நான் அடிமை மாதிரியான திரைப்படங்கள் மூலமாக எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றவர் நடிகர் ராமராஜன். ஒரு காலகட்டத்தில் ரஜினிகாந்தும் கமலஹாசனுமே பார்த்து பயந்த ஒரு நடிகர் என்று ராமராஜனை கூறலாம்.

ஏனெனில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருபதுக்கும் அதிகமான படங்களை வெற்றி படங்களாக கொடுத்த ஒரு நடிகராக ராமராஜன் இருக்கிறார். ராமராஜன் வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் அவர் அளவிற்கு கமல் மற்றும் ரஜினி கூட வளர்ச்சி அடையவில்லை என்று கூறப்படுகிறது.

அந்த அளவிற்கு வெற்றியை கொடுத்த நடிகராக ராமராஜன் இருந்து வந்தார் ஆனால் அவருக்கு உடல் எடை கூடிய பிறகு அவரின் வயது காரணமாக அவர் நடித்த படங்களுக்கு வரவேற்பு குறைய தொடங்கியது. இந்த நிலையில் சமீபத்தில் ராமராஜன் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

அவர் நடிகை நளினியை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவர் திருமணத்தையும் நடிகர் எம் ஜி ஆர் தான் செய்து வைத்தார். ஏனெனில் பெண் வீட்டார் சார்பில் நிறைய பிரச்சனைகள் இருந்தன.

அதிலிருந்து எம்.ஜி.ஆர்தான் இவர்களை காப்பாற்றி திருமணம் செய்து வைத்தார். ராமராஜனுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இது குறித்து அவர் பேட்டியில் பேசும் பொழுது எனது மகன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டான்.

மகளும் நல்ல வேலையில் இருக்கிறாள் இருவருமே செட்டில் ஆகிவிட்டார்கள் அதை பொருத்தவரை மகிழ்ச்சி தான். ஆனால் எனது மகளுக்கு இன்னமும் குழந்தை இல்லை அதுதான் எனக்கு இருக்கும் ஒரே வருத்தம் என்று தெரிவித்திருக்கிறார் ராமராஜன்.

 

To Top