Connect with us

ராமராஜன் நடித்து வெளிவராத திரைப்படங்கள்?.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே!..

ramarajan

Cinema History

ராமராஜன் நடித்து வெளிவராத திரைப்படங்கள்?.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே!..

Social Media Bar

Ramarajan Movies : தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்தவர் நடிகர் ராமராஜன். ஒரு சமயத்தில் கமல் ரஜினிகாந்தே பயப்படும் அளவிற்கு சினிமாவில் உச்சத்தை தொட்டவர் ராமராஜன். ராமராஜன் நடித்தால் மட்டும் போதும் அந்த படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துவிடும்.

ஆனால் யானைக்கும் அடி சருக்கும் என்பது போல காலம் செல்ல செல்ல அவரது திரைப்படங்களுக்கு இருந்த வரவேற்பும் குறைய துவங்கின. தொடர்ந்து ஒரே மாதிரியான கதைக்களத்தை அவர் தேர்ந்தெடுத்ததே இதற்கு காரணம் என பேச்சுக்கள் உண்டு.

இப்படி அவரது வீழ்ச்சி துவங்கிய காலத்தில் அவர் நடித்த பல திரைப்படங்கள் திரைக்கே வராத சம்பவங்களும் நடந்தன. அப்படியான திரைப்படங்களை இப்போது பார்ப்போம்.

வேலா, தங்கநிலா, தர்மன், காவலன், பெத்தவ மனசு, சத்திய தாய், காங்கேயன் காளை, கண்ணுபட போகுது,தம்பிக்கு தாய் மனசு, நான் உங்கள் பக்கம், கூவுங்கள் சேவல்களே, மண்ணுக்கேத்த மைந்தன், நம்ம ஊர் சோழவந்தான், கும்பாபிஷேகம், பல்லவன் பாண்டியன், மதுரை தங்கம், ஆகிய திரைப்படங்கள் எல்லாம் இவர் நடித்தும் வெளிவராத திரைப்படங்களாக உள்ளன.

இந்த படங்களில் சில திரைப்படங்கள் படப்பெயரை அறிவித்ததுமே படப்பிடிப்பு நடக்காமல் நின்றுவிட்டன. அப்போதெல்லாம் முதலில் படத்திற்கு பெயர் வைத்துவிடுவார்கள். பிறகுதான் படப்பிடிப்பே துவங்கும். இன்னும் சில படங்கள் படப்பிடிப்பு துவங்கி அதற்கு பிறகு தடைப்பட்டன. சில படங்களில் பாடல்கள் எல்லாம் வெளியாகி படங்கள் மட்டும் வெளியாகாமல் போனது.

அப்போதெல்லாம் ரஜினி கமல்ஹாசன் பெரும் நடிகர்களாக இருந்ததால் ராமராஜனின் வராத திரைப்படங்களை மக்கள் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டனர். இருந்தாலும் இப்போது வரை ராமராஜனை போல தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுத்த இன்னொரு நடிகர் வரவில்லை என்றே கூற வேண்டும்.

Articles

parle g
madampatty rangaraj
To Top