ரெண்டு முதலை இருந்த குளத்தில் சிக்கிட்டேன்.. ராம்கிக்கு நடந்த உண்மை சம்பவம்..!
1990 களுக்கு பிறகு நிறைய நடிகர்கள் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெறதுவங்கினர். சிலர் ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களில் நடித்ததன் மூலமாகவே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றனர்.
அப்படியான நடிகர்களில் நடிகர் ராம்கி முக்கியமானவர் நடிகர் ராம்கி. ஸ்டண்ட் கலைகளை கற்றுக்கொண்டு சினிமாவிற்கு வந்தவர் என்பதால் டூப் போடாமல் எந்த ஒரு காட்சியும் நடிக்க கூடியவர். அவர் நடித்த திரைப்படங்களில் அதிக பிரபலமான திரைப்படம் இணைந்த கைகள்.
இணைந்த கைகள் திரைப்படத்தில் அருண்பாண்டியன் மற்றும் ராம்கி இருவருமே கதாநாயகனாக நடித்திருந்தனர். அந்த படத்தில் வரும் பல காட்சிகளை அருண்பாண்டியனும் ராம்கியும் டூப் போடாமல் நடித்திருந்தனர்.
ராம்கிக்கு நடந்த நிகழ்வு:
அப்படியாக ஒரு காட்சியில் நடித்த அனுபவத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் ராம்கி. இணைந்த கைகள் படத்தில் ஒரு காட்சியில் ஒரு குளத்திற்கு மேலாக கயிற்றில் நான் தொங்குவது போன்ற காட்சி படம் பிடிக்கப்பட்டது.
அப்பொழுது எந்த டூப்பும் போடாமல் நானே அந்த காட்சியில் நடித்தேன். அதில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தக் குளத்தில் இரண்டு முதலைகள் இருக்கிறது என்பதை எனக்கு கூறினார்கள். அதனால் மறுபடி மறுபடி அந்த காட்சிகள் எடுக்கப்பட்ட பொழுது எனக்கு அதிக பயமாக இருந்தது.
ஒருவேளை குளத்தில் விழுந்துவிட்டால் என்ன செய்வது என்கிற பயம் இருந்து கொண்டே இருந்தது என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் ராம்கி.