Connect with us

யோகா கத்துக்க போன இடத்தில் காதல் கற்றுக்கொடுத்த வாலிபர்… ரம்யா பாண்டியனுடன் திருமணம்.. என்னப்பா சொல்றிங்க..!

ramya pandian

Tamil Cinema News

யோகா கத்துக்க போன இடத்தில் காதல் கற்றுக்கொடுத்த வாலிபர்… ரம்யா பாண்டியனுடன் திருமணம்.. என்னப்பா சொல்றிங்க..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன்.

பெரும்பாலும் நடிகைகளுக்கு திரைப்படங்கள்தான் வரவேற்பை பெற்று தரும். ஆனால் நடிகை ரம்யா பாண்டியனை பொறுத்தவரை அவருக்கு அவரது போட்டோக்கள்தான் அதிக பிரபலத்தை பெற்றுக் கொடுத்தன.

ramya pandian

ramya pandian

தமிழில் அவர் நடித்த ஜோக்கர் திரைப்படத்தில் பெரிதாக மேக்கப் எதுவும் இல்லாமல் நடித்திருந்தார் ரம்யா பாண்டியன். அதனால் ரம்யா பாண்டியனின் உண்மையான அழகு என்ன என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது.

ரம்யா பாண்டியனின் காதல்:

இந்த நிலையில் instagramல் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாக துவங்கியது. அதற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைத்தன. தொடர்ந்து விஜய் டிவியில் வரவேற்பை பெற்றார் ரம்யா பாண்டியன்.

ramya pandian

ramya pandian

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக இவர் அதிக பிரபலமடைந்தார். பிறகு தமிழில் சில திரைப்படங்களிலும் இவர் நடித்து வந்தார்.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் அடுத்து திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது இவர் பஞ்சாபை சேர்ந்த லோவல் தவான் என்கிற ஒரு நபரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. யார் இந்த லோவல் தவான் என்று பார்க்கும் பொழுது பெங்களூரில் யோகா கற்றுக் கொள்வதற்காக ஒரு யோகா கிளாஸ் சென்று இருக்கிறார் ரம்யா பாண்டியன்.

அங்கு யோகா கற்றுத்தருபவராக லோவல் தவான் இருந்திருக்கிறார் அவருக்கும் ரம்யா பாண்டியனுக்கும் இடையே அங்கு தான் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது அதனை தொடர்ந்து இருவரும் நவம்பர் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.

To Top