Latest News
ஆணவக்கொலைக்கு ஆதரவா பேசலாமா!.. சர்ச்சையில் சிக்கிய ரஞ்சித்!.
தமிழ் சினிமாவில் சில முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் ரஞ்சித். இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகராகவும் சில குணச்சித்திர வேரிடங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு ரஞ்சித் படங்களில் நடிக்கவில்லை. மேலும் அவர் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் மூலம் மீண்டும் என்ரி கொடுத்தார்.
இந்நிலையில் அவர் இயக்கியிருந்த படம் ஒன்று வெளியான நிலையில் அதில் ஆணவக் காெலையை பற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அது தற்பொழுது சர்ச்சையாகிய நிலையில் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் ரஞ்சித்
இவர் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த பொன்விலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதன் பிறகு பல படங்களில் நடித்திருந்தார். மேலும் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் இவர் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பிறகு நடிகை பிரியா ராமனை திருமணம் செய்து கொண்டார்.
பல படங்களில் சிறப்பு தோற்றத்துலும் ஒரு சில படங்களை தானே இயக்கியும் நடித்திருந்தார். நடிப்பு மட்டுமில்லாமல் அரசியலிலும் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். அரசியலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராகவும் இவர் திகழ்ந்தார். அரசியலிலும் பிரவேசித்து வந்த ரஞ்சித் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து வருவார்.
இந்நிலையில் அவரின் இயக்கத்தில் புதுமுகங்களை வைத்து எடுத்துள்ள படம் கவுண்டம்பாளையம். இந்த பாடம் நாடக காதல் குறித்தும் அதனால் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி கூறி இருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது அவர் கூறிய கருத்து தற்பொழுது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது
ஆணவ கொலைக்கு ஆதரவாக பேசியுள்ளாரா ரஞ்சித்
இந்நிலையில் பல புது முகங்களை வைத்து கவுண்டம்பாளையம் என்ற படத்தை நடிகர் ரஞ்சித் இயக்கியிருந்தார். அந்த படம் நாடக காதல் குறித்தும் அதனால் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை குறித்தும் படமாக எடுக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதமே இந்த திரைப்படம் வெளியிடப்பட இருந்த நிலையில் சில பிரிவினர்கள் இந்த படத்தை வெளியிட்டால் சேதப்படுத்துவோம் எனக் கூறியதால் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவின் பெயரில் படம் சமீபத்தில் வெளியானது.
படத்தைப் பார்த்துவிட்டு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் நடிகர் ரஞ்சித். அவர் பேசும் போது சாதி சார்ந்த படம் என்று பலரும் இந்த படத்தை விமர்சிக்கிறார்கள். படத்தைப் பார்த்துவிட்டு நல்ல படமா? கெட்ட படமா? என மக்கள் கூறட்டும். மக்களுக்காக இந்த படத்தை எடுத்திருப்பதால் குறிப்பிட்ட வட்டத்திற்குள் என்னை வைத்து வன்மத்தை பரப்புகிறார்கள். மேலும் ஒரு சில சமூகத்தினரிடமிருந்து என்னை புறக்கணிக்க பார்க்கிறார்கள் என கூறினார்.
ஆணவக் கொலை குறித்த கேள்விக்கு அவர் பதில் சொல்லும் போது, ஆணவக் கொலை என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு இதை தான் நான் இந்த படத்தில் தீர்வாக சொல்லி இருக்கிறேன். குழந்தைகள் காதலித்து அதில் பிரச்சினையை சந்திக்கும்போது அந்த வலி பெற்றோர்களுக்கு தான் தெரியும். ஒரு பைக்கை திருடிக் கொண்டு திருடன் சென்று விட்டால் அவனை தேடிச்சென்று அடிக்கிறோம். அதே போல பெற்றோர்களுக்கு வாழ்க்கையாக இருக்கும் குழந்தைகள் ஏதாவது செய்தால் அவர்களின் வலி எவ்வாறு இருக்கும்.
மேலும் அந்த குழந்தையின் வாழ்க்கைக்கு ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ என்ற கோபத்தை தான் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். மேலும் இது பெற்றோர்களின் அக்கறையால் நடக்கிறது. இது வன்முறை அல்ல.. கலவரமும் அல்ல.. நல்லதோ கெட்டதோ அந்த குழந்தைகளின் மீது இருக்கிற அக்கறை காரணமாகத்தான் நடக்கிறது. இதில் யாரை குற்றம் சொல்வது என எனக்கு தெரியவில்லை என்று பேசி இருக்கிறார். இந்நிலையில் இவரின் கருத்து குறித்து தற்பொழுது பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்