பட்ட பெயர் எல்லாம் எதுக்கும் உதவாது.. நயன் தாராவை தாக்கி பேசிய ராஷ்மிகா.!

தென்னிந்திய அளவில் மட்டுமல்லாமல் வட இந்தியாவில் பிரபலமான நடிகையாக மாறி வருபவர் நடிகை ராஷ்மிகா. தென்னிந்தியாவில் மட்டுமே புகழ் பெற்ற நடிககையாக இருந்த ராஷ்மிகாவிற்கு புஷ்பா திரைப்படம் அதிக வரவேற்பை பெற்று தந்தது.

பாலிவுட்டில் வாய்ப்புகளை பெற தொடங்கியிருக்கிறார் ராஷ்மிகா.  இதனால் தென்னிந்திய நடிகைகளில் தற்சமயம் அதிக சம்பளம் வாங்குபவராக ராஷ்மிகா மாறி இருக்கிறார். தற்சமயம் அவர் பாலிவுட்டில் இன்னொரு திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு விழாவில் பேசிய ராஷ்மிகா கூறும் பொழுது நடிகைகள் தங்களுக்கென்று வைத்துக் கொள்ளும் பட்ட பெயர்கள் எல்லாம் சும்மா திரைப்படங்களில் போட்டுக் கொள்ளலாம்.

rashmika
rashmika
Social Media Bar

ஆனால் அவை வாழ்க்கைக்கு உதவாது ரசிகர்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. நான் எனது ரசிகர்களை எனது இதயத்திற்கு அருகில் வைத்துப் பார்க்கிறேன் என்று ராஷ்மிகா கூறியிருந்தார்.

தென்னிந்தியாவில் நடிகை நயன்தாராதான் தனக்கென்று லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை வைத்து கொண்டுள்ளார். மற்ற நடிகைகள் யாருமே பெரும்பாலும் அவர்களுக்கு பட்ட பெயர் எதுவும் வைத்துக் கொண்டது கிடையாது. எனவே ராஷ்மிகா நயன்தாராவை குறிப்பிடும் வகையில் தான் இப்படி பேசியிருக்கிறார் என்று இது குறித்து கருத்துக்கள் நிலவி வருகின்றன.