Connect with us

கட்டிப்பிடிச்சு கசாமுசா.. ப்ரதீப்பிடம் சிக்கிய மணி – ரவீனா! – பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்?

raveena

Bigg Boss Tamil

கட்டிப்பிடிச்சு கசாமுசா.. ப்ரதீப்பிடம் சிக்கிய மணி – ரவீனா! – பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்?

பிக்பாஸ் 7வது சீசன் தொடங்கி இரண்டு வாரங்களை நெருங்க போகும் நிலையில் இன்னும் காதல் கதை உருவாகாமல் இருந்தால் எப்படி? கடந்த பிக்பாஸ் தொடர்களிலும் இதுபோன்ற காதல் கதைகள் பல நடந்துள்ளன.

இந்த தொடரிலும் ஆரம்பம் முதலே மாயா – விஜய் வர்மா இடையே ஒரு நெருக்கம் தொடர்ந்து வருகிறது. அதேபோல மணியும், ரவீனாவும் ஆரம்பம் முதலே மிகவும் நெருக்கம் காட்டி வருகின்றனர். காலையில் பாடல் போடும்போது ஆடும்போது எல்லாம் மணி ரவீனாவை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவது போன்றவை ஹவுஸ்மேட்ஸுக்கே சந்தேகத்தை ஏற்படுத்திதான் வந்துள்ளது.

இந்நிலையில் ரவினாவின் பிறந்தநாள் பிக்பாஸ் வீட்டில் கொண்டாடப்பட்டது. அதற்கு பின் அவர்கள் தனியாக சந்தித்து கட்டிப்பிடித்துக் கொண்டதாக தெரிகிறது. அதை ப்ரதீப் பார்த்து விட்டதால், அவர்களை கிண்டல் செய்யும் விதமாக “காதல் கண்டெண்ட் க்ரியேட் பண்ரீங்களா?” என திரும்ப திரும்ப கேட்க கடுப்பான ரவினா “இந்த கிறுக்கன் வேற படுத்துறானே!” என சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டார். அவர் மிகவும் அப்செட்டாக காணப்பட்டார்.

வீட்டுக்குள் போகும்போதும் ப்ரதீப் கிண்டல் செய்யவும், “என்ன நாங்க கட்டுப்புடிச்சிட்டு இருந்தத பாத்துட்டீங்களா? நீங்களும் வாங்க உங்களையும் வேணும்னா கட்டிப்பிடிக்கிறேன்” என ரவீனா கூற, “சரி வந்து கட்டிப்புடி” என ப்ரதீப் கேட்டபோதும் அதை காதில் வாங்கி கொள்ளாமல் வீட்டிற்குள் சென்றுவிட்டார் ரவீனா.

பின்னர் அங்கு வந்த மணி, அவளிடம் அப்படி பேச வேண்டாம் என ப்ரதீப்பிடம் சொல்லிவிட்டு சென்றார். இதனால் பிக்பாஸ் வீட்டில் ஒரு காதல் கதை உருவாகியிருப்பதாக தெரிகிறது.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
manimegalai vj vishal
To Top