Tamil Cinema News
ரவி மோகன் உதவிக்கு வந்த கார்ப்பரேட்டுகள்.. சொந்த காலில் நிற்க இதுதான் காரணம்..!
தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து ஆன பிறகு ரவி மோகன் கோவாவிற்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.
திரைப்படங்கள் நடிப்பதற்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வந்தவண்ணம் இருக்கிறார். இந்த நிலையில் அதற்குப் பிறகு ரவி மோகனின் கதை தேர்ந்தெடுப்புகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.
முக்கியமாக கதை அம்சங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ரவி மோகன். இந்த நிலையில் அடுத்த திரைப்படங்களை தயாரிக்கவும் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து ரவி மோகன் ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மனைவியுடன் பிரிவு ஏற்பட்ட பிறகு ரவி மோகனிடம் அதிகமாக காசு இல்லை என்று தான் பேச்சுக்கள் இருந்தன.
அப்படி இருக்கும்பொழுது எப்படி படம் தயாரிக்கிறார் என்று பலருக்குமே கேள்விகள் இருந்தது. அதற்கு காரணம் என்னவென்றால் ரவி மோகனுக்கு நிறைய கார்ப்பரேட் நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள் தான் இப்பொழுது திரைப்படங்களை தயாரிப்பதற்கு முன் வந்து இருக்கின்றனர்.
அவர்களுடன் பார்ட்னர்ஷிப் போட்டுதான் ரவி மோகன் திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
