பக்கத்து வீட்டில் நடந்த கசமுசா.. எட்டி பார்த்து நடிகை செய்த வேலை.. இது ஒரு பழக்கமா?
தமிழ் சினிமாவில் கேடி பில்லா, கில்லாடி ரங்கா திரைப்படம் மூலமாக அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை ரெஜினா. தொடர்ந்து தமிழில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று அதன் மூலமாக தொடர்ந்து வளர்ச்சி பெறும் நடிகையாகவும் மாறினார்.
பிறகு ஒரு கட்டத்திற்கு பிறகு இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அந்த நிலையில் தொடர்ந்து வில்லியாக நடித்த தொடங்கினார். இப்படியாக சக்ரா மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை ரெஜினா.

அதே சமயம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கான வாய்ப்புகளை தக்கவைத்துக் கொண்டே இருக்கிறார். தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரெஜினா நடித்து வருகிறார்.
ரெஜினா செய்த காரியம்:
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரது வாழ்க்கை சம்பவத்தை பகிர்ந்திருந்தார். அவரிடம் செய்யக்கூடாத ஏதாவது ஒரு தவறு செய்து அதற்காக வீட்டில் அடிவாங்கி இருக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ரெஜினா கூறும்பொழுது ஆமாம் நான் சிறுவயதாக இருக்கும் பொழுது எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்ததற்காக எனது அம்மா என்னை அடித்தார் என்று கூறினார்.
அப்படி உங்கள் அம்மா அடிக்கும் அளவிற்கு எதை பார்த்தீர்கள் என்று கேட்கும் பொழுது பார்க்க கூடாத ஒரு விஷயத்தை பார்த்ததற்காக தான் அடித்தார்கள். அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா? என்று கூறியிருக்கிறார் ரெஜினா.