வளர்ந்ததும் என்ன மறந்தீட்டிங்களே!.. உதவி செய்த பாரதிராஜாவிடம் நன்றி மறந்த இளையராஜா!.
பாரதிராஜா தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் இமையம் என அழைக்கப்படும் அளவிற்கு பல வித்தியாசமான திரைப்படங்களையும், வெற்றி திரைப்படங்களையும் கொடுத்துள்ளார். சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டம் முதலே பாரதிராஜாவும் இளையராஜாவும் நண்பர்களாகதான் இருந்தனர்.
இந்த நட்பு இருவரும் திரையில் பிரபலமாவதற்கு முன்பே துவங்கிய நட்பு எனலாம். இதுக்குறித்து கங்கை அமரன் கூறும்போது நாங்கள் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தப்போது சென்னையில் இருந்து பிழைக்க முடியும் என எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தவரே பாரதிராஜாதான்.
அப்போது பாரதிராஜா ஆண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். அந்த மாதிரி விடுதிகளில் மிகவும் சின்னதாக அறைகள் இருக்கும். அதிலேயே மூன்று முதல் நான்கு நபர்கள் தங்கியிருப்பார்கள். அங்கு எங்களுக்கும் அடைக்கலம் கொடுத்தார் பாரதிராஜா.

நாங்கள் மனம் துவண்டு ஊருக்கு செல்ல இருந்தப்போதெல்லாம் எங்களுக்கு அவர்தான் தைரியம் கொடுத்தார். ஒரு மாதத்திற்கு உணவு உண்பதற்காக அவர் வைத்திருந்த டோக்கனை எங்களுக்கு கொடுத்தார். அதை வைத்து ஒரே வாரத்தில் டோக்கனை காலி செய்துவிட்டு பிறகு பட்டினி கிடந்திருக்கிறோம்.
அப்படியெல்லாம் பழகிய பாரதிராஜா அன்னகிளி திரைப்படத்தின் பூஜை நடந்தப்போது அதில் எங்களோடு கலந்துக்கொள்ளவில்லை. வெகு நாட்கள் கழித்து அவருக்கு போன் செய்து ஏன் அன்னக்கிளி பூஜைக்கு நீங்கள் வரவில்லை என கேட்டேன். நீங்க எங்கடா என்ன கூப்பிட்டிங்க.. வாய்ப்பு வந்ததும் என்ன மதிக்கவே இல்ல நீங்க என கூறினார் பாரதிராஜா. என்று விளக்குகிறார் கங்கை அமரன்.
ஆனால் பிறகு தனது முதல் படமான 16 வயதினிலே படத்தை இயக்கும்போது அதற்கு இளையராஜாவைதான் இசையமைக்க அழைத்தார் பாரதிராஜா.