Actress
நானோ சந்தன கட்ட! வாசம் பொங்குற கட்ட- ரேஷ்மாவின் புது லுக்!
2014 ஆம் ஆண்டு சின்னத்திரை நாடகங்களில் நடித்தது மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இவர் முதன்முதலாக மரகதவீணை என்னும் நாடகத் தொடரின் மூலமாக அறிமுகமானார்.

நாடகங்களில் நடித்து வருகிறார் என்றாலும் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு பெற வேண்டும் என்பதே ஆசையாக உள்ளது. மரகதவீணை நாடகத்தைத் தொடர்ந்து உயிர்மை, அன்பே வா போன்ற நாடகங்களிலும் இவர் நடித்து வந்தார்.

அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்கிற திரைப்படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரம் இவருக்கு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் இவருக்கு சிறப்பான கதாபாத்திரமாக அமைந்தது.

அதன் பிறகு வேறு வேறு படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் ரேஷ்மா. ஆனாலும் சினிமாவில் பெரிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.

விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்கிற வெப் சீரிஸில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் அவரால் கொஞ்சம் பிரபலமாக முடிந்தது. தற்போது இவர் அபி டெய்லர் என்னும் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

