News
பா.ரஞ்சித் தான் எப்போதுமே GOAT.. தெலுங்கு ரசிகரிடம் இருந்து தங்கலானுக்கு வந்த பதில்!.
இந்திய சினிமாவில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் தங்கலான். நடிகர் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் நடித்த இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்தது.
பலரும் எதிர்பார்த்திருந்த தங்கலான் திரைப்படத்தைப் பற்றி தற்போது தெலுங்கு ரசிகை ஒருவர் பதிவிட்டிருக்கும் கருத்தானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பா. ரஞ்சித்தின் தங்கலான் திரைப்படம்
பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவரைச் சுற்றி எப்பொழுதும் சர்ச்சைகளும், விமர்சனங்களும் சூழ்ந்து கொண்டு தான் இருக்கும். இந்நிலையில் அவர் எடுத்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், சமீபத்தில் நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் திரைப்படத்தை எடுத்தார்.

விக்ரம் ஒரு படத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட், டிரெய்லர் என அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தை பற்றி விக்ரம் போசும் போது கூட இந்த படத்திற்காக நான் மிகுந்த கஷ்டப்பட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஆனால் தமிழ் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்திருக்கிறது தங்கலான் திரைப்படம்
தங்கலான் திரைப்படத்திற்கு தெலுங்கு ரசிகரிடமிருந்து வந்த பதில்
தங்கலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அதில் நடித்த நடிகர் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பல நடிகர்களின் நடிப்புகள் பாராட்டை பெற்றது. ஆனால் மக்களுக்கு திரைக்கதையில் அவ்வளவாக ஈர்ப்பு ஏற்படவில்லை என பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் தெலுங்கு ரசிகர் ஒருவர் இயக்குனர் பா. ரஞ்சித் தான் எப்பொழுதும் கோட் எனவும், தங்கலான் திரைப்படத்தை அவர் இயக்கிய விதம் பற்றியும் தன்னுடைய கருத்தை பதிவிட்டு பா. ரஞ்சித்தை பாராட்டி இருக்கிறார் தற்போது, இந்த ரசிகை பாராட்டியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
