Tamil Cinema News
ஆர்.ஜே பாலாஜியின் அந்த தவறால் இப்போது வரை அனுபவிக்கிறேன்..! தயாரிப்பாளருக்கு நடந்த கஷ்டம்.!
ரேடியோவில் காமெடி ஆர் ஜேவாக இருந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக மாறி இருப்பவர் ஆர்.ஜே பாலாஜி. ஆரம்பத்தில் காமெடி நடிகராக சினிமாவில் நடித்து வந்த ஆர்.ஜே பாலாஜி.
அதற்குப் பிறகு இவர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார் கதாநாயகனாக அவர் தேர்ந்தெடுத்த கதைக்களங்களும் தொடர்ந்து காமெடி கதைக்களாக இருந்தன.
அதனால் அவருக்கு அதன் மூலமாக வரவேற்புகளும் கிடைத்தது. இப்பொழுது போக போக சீரியஸ் கதை களங்களை தேர்ந்தெடுப்பது நடிக்க துவங்கி இருக்கிறார். ஆர்.ஜே பாலாஜி சமீபத்தில் அவர் நடித்த சொர்க்கவாசல் திரைப்படம் கூட அந்த மாதிரியான கதைக்களத்தை கொண்ட திரைப்படம்தான்.
இதற்கு நடுவே திரைப்படங்களை இயக்கியும் வருகிறார் ஆர்.ஜே பாலாஜி. இதற்கு முன்பு அவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் வீட்ல விசேஷம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். தற்சமயம் சூர்யாவை வைத்து அடுத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஆர்.ஜே பாலாஜி.
இதற்கு நடுவே அவருடன் தன்னுடைய அனுபவம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது நானும் ரவுடிதான் திரைப்படத்தில் என்னை கேலி செய்யும் விதமாக நிறைய வசனங்களை பேசியிருந்தார் ஆர்.ஜே பாலாஜி.
பிறகு அதை என்னிடம் போன் செய்து கூறினார். நான் பரவாயில்லை என்று விட்டுவிட்டேன். ஆனால் இப்பொழுது வரை அந்த வசனத்தை கூறி பலரும் கேலி செய்து கொண்டுதான் இருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.