Tamil Cinema News
மணிரத்னம் சாரோட போனை எடுத்து பெரிய தப்பு பண்ணிட்டேன்..! ஓப்பன் டாக் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி.!
ரேடியோவில் ஆர்.ஜேவாக பணிப்புரிந்து தற்சமயம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜி பன்முக திறமைகளை கொண்ட ஒரு பிரபலம் என்றே கூறலாம்.
ஏனெனில் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் அவருக்கு காமெடியனாக நடிக்கதான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அப்படியே நடித்து கொண்டிருக்காமல் காமெடி கதாநாயகனாக நடிக்க நினைத்தார். இந்த நிலையில்தான் அவருக்கு எல்.கே.ஜி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
எல்.கே.ஜி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். சமீபத்தில் அவர் நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம் கூட நல்ல கதை களத்தை கொண்ட படமாகவே இருந்தது.
இந்த நிலையில் அவர் மணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.அதில் அவர் கூறும்போது வெளிநாட்டில் ஒரு விருது விழாவிற்காக நான் சென்றிருந்தேன்.
அப்போது எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் மணிரத்தினம் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறினார். யாரோ ப்ராங்க் செய்கிறார்கள் என நினைத்து நான் அமிதாபச்சந்தான் பேசுறேன் என கூறி போனை வைத்துவிட்டேன்.
பிறகு மீண்டும் போன் வந்துக்கொண்டே இருந்தது. பிறகுதான் தெரிந்தது மணிரத்தினம் அலுவலகத்தில் இருந்துதான் உண்மையிலேயே போன் செய்கிறார்கள் என்று.
ஆனால் இப்போது யோசிக்கிறேன் அந்த போனை எடுத்திருக்க கூடாது என்று. ஏனெனில் அந்த படத்தில் என்ன கதாபாத்திரம் என்றே எனக்கு தெரியவில்லை. வழக்கம்போல அந்த படத்தில் அதிகமாக பேச கூட மாட்டேன்.
ஆனால் பத்து நாள் மணிரத்தினம் சாரோடு இருக்கிறோம் என்கிற திருப்தி மட்டும் எனக்கு இருந்தது என கூறியுள்ளார் ஆர்.ஜே பாலாஜி.
