News
ஹிந்தில வந்த அமீர்கான் படத்தை காபி அடிச்சி நயன்தாராவை வச்சி எடுத்த படம்!.. எது தெரியுமா?.
Nayanthara and ameerkhan: தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. அவர் நடித்த எல்.கே.ஜி திரைப்படமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தி வந்த அமைதிப்படை திரைப்படத்திற்கு பிறகு அதே போலவே சிறப்பாக வந்த படம் எல்.கே.ஜி
எல்.கே.ஜி திரைப்படம் அரசியலை பேசும் படமாக அமைந்ததால் அடுத்து வரும் திரைப்படம் மத அரசியலை பேசும் படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தார் ஆர்.ஜே பாலாஜி. எனவே ஹிந்தியில் அமீர்கான் நடித்து வெளியான பி.கே திரைப்படத்தை தமிழில் படமாக்கலாம் என முடிவு செய்தனர்.

ஆனால் அதற்கான தமிழ் உரிமையை ஏற்கனவே தமிழில் வேறொரு தயாரிப்பாளர் வாங்கிவிட்டார். ஆனால் அந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்பது ஆர்.ஜே பாலாஜியின் பெரும் ஆசையாக இருந்தது. எனவே பி.கே போலவே ஒரு கதையை தயார் செய்தார் ஆர்.ஜே பாலாஜி.
அதுதான் மூக்குத்தி அம்மன் என்கிற திரைப்படம். இந்த திரைப்படம் தமிழில் வெளியானப்போது எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றது. சொல்ல போனால் திரைக்கதை ரீதியாக பி.கேவை விடவும் பல விஷயங்களை பேசியிருந்தார் ஆர்.ஜே பாலாஜி.
