இயக்குனராக களம் இறங்கும் ஆர்.ஜே பாலாஜி.. முதல் பட ஆசை இந்த படத்தில்தான் நிறைவேறி இருக்கு..!

சாதாரண ரேடியோ ஆர்.ஜேவாக இருந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக மாறி இருப்பவர் ஆர்.ஜே பாலாஜி.

ஆர் ஜே பாலாஜியை பொறுத்தவரை அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதைகளிலுமே வித்தியாசமான கதைகளைதான் தேர்ந்தெடுப்பார் அதனாலேயே அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உருவாக தொடங்கியது.

தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி திரைப்படங்களை இயக்கவும் தொடங்கினார் உண்மையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலேயே ஆர்.ஜே பாலாஜிக்கு அதிக பங்கு இருந்தது.

ஆர்.ஜே பாலாஜியின் ஆசை:

அதனை தொடர்ந்து அவர் இயக்கிய வீட்ல விசேஷம் திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இயக்குனராக வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்து வந்தது.

rj balaji
rj balaji
Social Media Bar

இந்த நிலையில் அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து இவர் திரைப்படம் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய திரைப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது ஆர்.ஜே பாலாஜியின் வெகுநாள் கனவாக இருந்தது. இந்த நிலையில் அதற்கு ஏ.ஆர் ரகுமான் சம்மதித்து இருக்கிறார்.

எல்.கே.ஜி திரைப்படம் உருவான பொழுதே அந்த திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கு ஏ.ஆர் ரகுமானிடம்தான் கேட்டிருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. ஆனால் அப்பொழுது அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை இந்த நிலையில் தற்சமயம் அவர் இயக்கும் திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பது அவருக்கு அதிக மகிழ்ச்சியை அளிப்பதாக கூறப்படுகிறது.