மீனாட்சி சௌத்ரியுடன் ஒரு வருஷம் முன்னாடியே… அதிர்ச்சி கொடுத்த ஆர்.ஜே பாலாஜி.. திறமையான ஆள்தான்..!
வானொலியில் தொகுப்பாளராக பணிபுரிந்து தற்சமயம் தமிழ் சினிமாவின் முக்கியமான பிரபலமாக மாறி இருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ஆரம்பத்தில் காமெடி நடிகராக நடிக்க வந்தாலும் தன்னுடைய திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.
எனவே மிகவும் துணிச்சலாக கதாநாயகனாக திரைப்படங்களில் களமிறங்கினார் ஆர்.ஜே பாலாஜி. அப்படியாக அவர் நடித்த எல்.கே.ஜி திரைப்படம் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
அதற்கு பிறகு தொடர்ந்து காமெடியான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ஆர்.ஜே பாலாஜி. இந்த நிலையில் இப்போது ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் கதை களங்கள் எல்லாம் கொஞ்சம் சீரியசான கதைகளைக் கொண்டிருக்கின்றன.
அப்படியாக சமீபத்தில் அவர் நடித்த படம் சிங்கப்பூர் சலூன். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருந்தார் அதற்கு பிறகு மீனாட்சி சௌத்ரி நடித்த கோட் மற்றும் லக்கி பாஸ்கர் இரண்டு திரைப்படங்களும் நல்ல வெற்றியை பெற்றன.
மேலும் அவை மீனாட்சி சவுத்திரிக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பேசிய போது ஆர்.ஜே பாலாஜி கூறும்போது ஏற்கனவே ஒரு வருடம் முன்பே எனக்கு ஒரு திரைப்படம் பண்ணிக் கொடுப்பதாக கூறியிருக்கிறார் மீனாட்சி சௌத்ரி.
ஆனால் இப்பொழுது அவருடைய கால்ஷீட் மிக பிஸியாகிவிட்டது இப்பொழுது எனக்கு பட வாய்ப்பு கொடுப்பாரா என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார் கண்டிப்பாக உங்களுக்கு வாய்ப்பு உண்டு என்று கூறியிருந்தார் மீனாட்சி சௌத்ரி.