Latest News
முடி வெட்டுறதும் ஒரு மரியாதையான தொழில்தான்!.. வரவேற்பை பெறும் சிங்கப்பூர் சலூன் பட ட்ரைலர்!..
Singapore saloon Trailer: இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதி ரீதியான பிரிவினை என்பது இருந்து வருகிறது. அந்த பிரிவினை காரணமாக மக்கள் மத்தியில் சில தொழில்கள் இழிவானதாக பார்க்கப்படுகிறது.
திறன் சார்ந்த தொழில்களுக்கும் அந்த தொழிலை செய்பவர்களுக்கு இங்கு மரியாதை இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அந்த வகையில் முடி வெட்டுவது என்பது ஒரு இழிவான தொழிலாகவும், அதை செய்யும் தொழிலாளர்களை இழிவாக பார்க்கும் நிலை இன்றும் இந்தியாவில் உண்டு.
இந்த நிலையில் முடிவெட்டும் தொழிலும் ஒரு நல்ல கௌரமான தொழில்தான் என பேசுகிறது சிங்கப்பூர் சலூன் திரைப்படம். இஞ்சினியர், மருத்துவர், வக்கீல் மாதிரியான தொழில்கள் கௌரமான தொழிலாக தெரியும்போது முடி திருத்தம் செய்யும் தொழில் மட்டும் கேவலமாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தொழிலாகதான் பார்க்கப்படுகிறது.
ஆனால் உலக அளவில் இந்த மாதிரியான ஹேர் ட்ரெஸ்ஸிங் மற்றும் முக அலங்காரத்திற்கு வேறு லெவல் மார்க்கெட் உண்டு. அப்படியான மார்க்கெட்டை பிடித்து பெரிய ஆளாக நினைக்கும் ஒரு இளைஞனின் கதையாக சிங்கப்பூர் சலூன் உள்ளது.
இதற்கு நடுவே அதில் ஆணித்தனமாக கால் பதித்திருக்கும் கார்பெரேட் நிறுவனங்களை மீறி சிங்கப்பூர் சலூன் எப்படி வளர்கிறது என்பது கதையாக இருக்கிறது.
இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியான நிலையில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்