50 லட்சத்தை கடந்த ஆர்.ஜே பாலாஜி திரைப்படம் ! – அடுத்து வரும் பேய்படம்!

தமிழ் சினிமாவில் தற்சமயம் ஆர்.ஜே பாலாஜி திரைப்படங்கள் என்றாலே அதற்கு தனி வரவேற்பு இருந்து வருகிறது. இவர் இதற்கு முன்பு நடித்த எல்.கே.ஜி, மூக்கூத்தி அம்மன், வீட்ல விஷேசன் என அனைத்து திரைப்படங்களுமே வித்தியாசமான கதை அம்சத்தில் உருவான திரைப்படங்கள்.

Social Media Bar

ஆனால் இவற்றில் எல்லாம் ஆர்.ஜே பாலாஜி ஒரு நகைச்சுவை கதாபாத்திரமாக தோன்றினார். இந்த நிலையில் தற்சமயம் இவர் நடித்து பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் ரன் பேபி ரன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு க்ரைம், ஹாரர் திரைப்படமாக இருக்கிறது. இந்த படத்தில் ஆர்.ஜே பாலாஜி ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி 4 நாள் ஆகிய நிலையில் 50 லட்சம் வீவ்களை கடந்துள்ளது. ஆர்.ஜே பாலாஜியை போன்ற வளர்ந்து வரும் கதாநாயகர்கள் தங்கள் படத்திற்கு இவ்வளவு வீவ்களை பெறுவதே பெரிய விஷயம் என கூறப்படுகிறது.

ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்.