நம்புங்க சார் இது கைதிதான்! –  கலாய் மெட்டிரியல் ஆன ஹிந்தி கைதி!

தமிழில் கார்த்தி நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் கைதி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்போது வரையிலும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் எடுப்பதற்கு முடிவானது. பிரபல ஹிந்தி நடிகரான அஜய் தேவ்கன் அவரே இயக்கி அவரே நடித்து, அவரே தயாரித்து இந்த படத்தை உருவாக்குகிறார். மேலும் இந்த படம் 3டியில் வர இருக்கிறது.

பாலிவுட் படமாக மாறும்போது மொத்தமாக கைதி திரைப்படத்தில் இருந்து மாறி இருக்கிறது போலா திரைப்படம். இந்த படத்தில் அஜய் தேவ்கனை சிவ பக்தனாகவும், கிட்டத்தட்ட சிவனின் அவதாரமாகவும் காட்டியுள்ளனர். இதனால் கையில் சூலாயிதத்துடன் சுற்றுகிறார் அஜய் தேவ்கன்.

சண்டை காட்சிகள் எல்லாம் தெலுங்கு சினிமாவை விட மோசமாக அமைந்துள்ளது. கைதி படத்தின் முக்கிய வெற்றிக்கு காரணமே அதில் அமைந்திருந்த சண்டை காட்சிகள்தான். சிம்பிளாக அதே சமயம் மாஸாக அந்த காட்சிகள் அமைந்திருந்தன.

ஆனால் இந்த படத்தில் அஜய் தேவ்கன் பல சாகசங்களை செய்கிறார். ஒருவேளை பாலிவுட் ரசிகர்களுக்கு இப்படியான படங்கள் பிடித்தவையாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் இந்த படம் கைதி போல இல்லை என லோகேஷ் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். கைதி படத்தை ஐ.சி.யுவில் ஏற்றிவிட்டனர் என நெட்டிசன்கள் இந்த படத்தை கலாய்த்து வருகின்றனர்.

இந்த படத்தின் ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்.

Refresh