News
குழந்தை ஆப்ரஷனுக்காக எல்லாத்தையும் பண்ணுனார்!.. ஆர்.ஜே பாலாஜிக்கு ஆச்சரியத்தை கொடுத்த நடிகர்!.
ஆர்.ஜேவாக இருந்து தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ஆரம்பத்தில் காமெடி படங்களாக நடித்து வந்தாலும் கூட போக போக சீரியஸான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
ஆனால் முக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்து வெளியான ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் போன்ற திரைப்படங்கள் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றே கூற வேண்டும். இந்த நிலையில் எல்.கே ஜி திரைப்படத்தில் அவருடன் நடித்த நடிகரும் அரசியல் வாதியுமான ஜே.கே ரித்திஷ் குறித்து சில வார்த்தைகள் பகிர்ந்திருந்தார் ஆர்.ஜே பாலாஜி.
ஆர்.ஜே பாலாஜி கூறும்போது, ”ஜே.கே ரித்திஷ் அதிகமாக உதவும் குணமுடையவர். யாராவது ஒருவர் பசிக்கிறது சாப்பிடவில்லை என கூறினால் அவர்களிடம் ஒரு 500 ரூபாய் கட்டை எடுத்து கொடுத்துவிடுவார்.

அவர் அரசியல்வாதி, நடிகர் என்பதெல்லாம் தாண்டி அந்த விஷயத்தில் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். பலபேர் நிறைய சம்பாதிக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அப்படி உதவும் மனப்பான்மை வருவதில்லை. ஒருமுறை அவருடன் ஒரு டிவி நிகழ்ச்சிக்கு சென்றோம்.
அங்கு ஒரு சிறுவனுக்கு உடல் பிரச்சனை மருத்துவ உதவிக்கு பணமில்லை என அவரது பெற்றோர் அழுதனர். நான் உதவுகிறேன் என நான் கூறுவதற்கு முன்பே ரித்திஷ் எழுந்து அந்த குழந்தையின் மருத்துவ செலவை பார்த்துகொள்கிறேன் என கூறிவிட்டார்.
அதோடு மட்டுமின்றி நேரில் அந்த குழந்தையின் வீட்டிற்கே சென்று மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செலவுகளை பார்த்துக்கொண்டார். இதெல்லாம் இந்த காலத்தில் யார் செய்வார்கள் என கூறியுள்ளார் ஆர்.ஜே பாலாஜி.
