தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி இப்பொழுது இயக்குனராக மாறியிருப்பவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜி காமெடியனாக மட்டும் நடிக்காமல் அடுத்தடுத்த படங்களிலேயே அவர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.
அவர் தேர்ந்தெடுத்த காமெடி கதைகளும் நிறைய வரவேற்பை பெற்றது. அவர் நடித்த மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், எல்.கே.ஜி மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற படங்கள் ஆகும்.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் போல நீங்களும் ஒரு ஆர் ஜே பாலாஜி சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்று உருவாக்க இருக்கிறீர்களா? என்று ஒரு கேள்வியை கேட்டனர் அவரது ரசிகர்கள்.

ஏனெனில் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களில் ஒரு திரைப்படத்திற்கும் மற்றொரு திரைப்படத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதை பார்க்க முடியும் இதற்கு பதில் அளித்த ஆர்.ஜே பாலாஜி நான் ஏற்கனவே அதை செய்திருக்கிறேன்.
மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் ஆகிய இரண்டு படங்களிலும் எல்.கே.ஜி திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்தை வர வைத்திருப்பேன். எனவே நான் திரைப்படம் இயக்கும்போது அதே மாதிரி லோகேஷ் கனகராஜ் மாதிரியே செய்வதற்கு எனக்கு விருப்பம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி.
எனவே இப்பொழுது அவர் சூர்யாவை வைத்து இயக்கும் கருப்பு திரைப்படமும் அடுத்து அவர் இயக்க இருக்கும் திரைப்படங்களுடன் தொடர்புடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.